முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டி, தாராபுரம் நகை கடை அதிபர் மனைவி கொடூரமான தற்கொலை? பகீர் பின்னணி
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகைக்கடை அதிபரின் மனைவி தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டியதுடன், கழுத்தில் சேலையையும், கைகளை நூல் கயிறால் கட்டிக்கொண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இது பற்றி மாமியாரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய கடைவீதியில் நகை கடை நடத்தி வருபவர் அவிநாசிலிங்கம் (எ) ரமேஷ் (வயது 44) இவரது மனைவி இவரது மனைவி சரண்யா (வயது 35) இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இருவரும் தாராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
சரண்யாவுக்கு அவரது மாமியார், நாத்தனர்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரண்யா இன்று வீட்டில் அவரது முகத்தில் பாலித்தின் கவரில் கயிர் கட்டி, பின்னர் விட்டதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது,

முகம் பிளாஸ்டிக் கவர்
தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ் பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டும், கைகள் நூல் கயிறால் கட்டப்பட்டும் இருந்தன. இதனால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சரண்யாவின் முகம் பிளாஸ்டிக் கவரால் கட்டப்பட்டு இருந்ததால் யாராவது அவரை கொன்று தூக்கில் தொங்கவிட்டனரா? என்று விசாரணை நடத்தினர். சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் காரணம்
இந்நிலையில் இறந்த சரண்யா தனது உடலில் கடிதம் ஒன்று மறைத்து வைத்திருந்ததாகவும் அந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் தனபாக்கியம், ரேணுகா, அவினாசிலிங்கம் மூன்று பேர்கள் உள்ளனர் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அது யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக என சரண்யாவின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமியார் காரணமா
இந்த சம்பவம் தொடர்பாக கூறப்படுவதாவது: சரண்யாவின் மாமனார் இறந்த பிறகு சொத்துக்களை 3 பிரிவாக பிரித்துள்ளனர். அவினாசிலிங்கம் மற்றும் அவரது தங்கை ரேணுகா, தாய் தனபாக்கியம் ஆகியோருக்கு பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அவினாசிலிங்கத்திற்கு பிரித்து கொடுக்கப்பட்ட சொத்துக்களை சரண்யாவின் மாமியார் தனபாக்கியம் அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின்அருகே உள்ள காலிஇடத்தில் சரண்யாவும், அவினாசிலிங்கமும் வீடு கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தனபாக்கியம் எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தற்கொலை
இதனால் மனமுடைந்த சரண்யா தற்கொலை செய்யமுடிவு செய்துள்ளார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முகத்தை பிளாஸ்டிக் கவரால் கட்டியதுடன், கழுத்தில் சேலையையும், கைகளை நூல் கயிறால் கட்டிக்கொண்டும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications