இது ஒரு வாழ்வா சாவா போராட்டம்.. திருப்பூரில் கே எஸ் அழகிரி உருக்கமான பேச்சு! ஏன் என்னாச்சு?
திருப்பூர்: இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். மாபெரும் வெற்றியை அடையச் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 ஆவது மாநில மாநாட்டின் ஒரு பகுதியாக சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காணொலி காட்சி
இந்த விழாவில் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார். இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசுகையில் இந்தியா மிகச் சிரமத்தில் உள்ளது. பிற்போக்குவாதிகளை அப்புறப்படுத்துவது எளிதல்ல. தேசத்தை முன்னேற்றும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்.

ஆட்சி அதிகாரம்
மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் இல்லாத போது நாம் வெற்றி பெற்றோம். இதை நாம் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் செய்ய வேண்டும். இது ஒரு வாழ்வா சாவா போராட்டம். இந்த போராட்டம் மாபெரும் வெற்றியடையச் செய்ய வேண்டும். நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது பெற்றதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பாஜக கூட்டணி
குடியரசுத் தலைவர் தேர்தலிலும் சரி குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலிலும் சரி பாஜக கூட்டணி வேட்பாளரே வெற்றி பெற்றுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைய அக்கட்சி பல வகையான யுத்திகளை கையாண்டு வருகிறது. விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம், புலனாய்வு அமைப்பை தவறாக பயன்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் போராட்டம்
அது போல் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி போன்றவற்றை கண்டித்து நாடாளுமன்றத்திலும் அனல் பறக்கும் விவாதங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றன. ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் களத்தில் இறங்கி போராடுகிறார்கள். இனி இவர்களது முன்னெடுப்புகள் தீவிரமாக இருக்கும் என்றே தெரிகிறது.
-
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications