சாப தொகுதி காங்கேயம்.. தோல்வி பீதியில் அமைச்சர்? ஜெயலலிதாவே எம்எல்ஏ பதவியை தூக்கியெறிந்த இடமாச்சே
திருப்பூர்: தமிழ்நாட்டு அரசியலில் சாபம் நிறைந்த தொகுதியாக திருப்பூர் மாவட்டம் காங்கயேம் சட்டசபை தொகுதி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொகுதியில் ஒருமுறை வென்ற வேட்பாளர் மீண்டும் ஜெயித்த வரலாறு கிடையாது. அதுமட்டுமின்றி அவர்களின் அரசியல் எதிர்காலம் மங்கிவிடும். இதனால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட இந்த தொகுதியில் வென்ற பிறகு அதனை ராஜினாமா செய்த வரலாறு உள்ளது. தற்போது அந்த தொகுதி எம்எல்ஏவாக அமைச்சர் வெள்ளகோவில் சுவாமிநாதன் உள்ள நிலையில் அவர் மீண்டும் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் கட்சிகள் என்னதான் முற்போக்கு பேசினாலும் கூட மூடநம்பிக்கையை நம்புவதை வழக்கமாக வைத்துள்ளன. இதனால் தான் அரசியல் கட்சி வேட்பாளர்கள் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பிரசாரம் தொடங்குவது, வேட்புமனு தாக்கல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளன.

இன்னும் சில கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கும் நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளன. இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் கட்சி தலைவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
'சாப' தொகுதி காங்கேயம்
அந்த வகையில் தமிழகத்தில் 'சாபம்' நிறைந்த தொகுதியாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சொல்லப்படுகிறது. இதற்கு அந்த தொகுதியில் இருக்கும் விசித்திர வரலாறு தான் காரணமாகும். இந்த தொகுதியை எடுத்து கொண்டால் ஒருவர் ஒருமுறை எம்எல்ஏ ஆனால் மீண்டும் ஜெயிப்பது கிடையாது. பலருக்கும் மீண்டும் தேர்தலில் வாய்ப்பு கூட கிடைக்காது.
திருப்பூர் மாவட்டம் கங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு விசித்திர வரலாறுண்டு: இங்கு வென்றவர் மீண்டும் வென்றதில்லை. 1991ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இங்கு வெற்றி பெற்றாலும், அதன்பின் யாரும் அதைத் தொடரவில்லை. இந்த 'சாபத்தை' உடைக்க, தி.மு.க. அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ. வெள்ளகோவில் எம்.பி. சாமிநாதன் களமிறங்குகிறார். வரும் மாநிலத் தேர்தலில் கங்கேயம் தொகுதியில் போட்டியிட அவர் கட்சி அனுமதி கோரியுள்ளார்.
ஜெயலலிதா ராஜினாமா செய்த தொகுதி
காங்கயேம் சட்டசபை தொகுதி இதுவரை இடைத்தேர்தல் உள்பட 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 9 முறை அதிமுக, தலா 3 முறை காங்கிரஸ், திமுக, ஒருமுறை சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதில் யாருமே மீண்டும் ஜெயித்தது கிடையாது. கடந்த 1991 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா 2 தொகுதிகளில் போட்டியிட்டார். பர்கூர் மற்றும் காங்கயேம் தொகுதிகளில் அவர் களமிறங்கினார்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட அவர் காங்கேயம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததோடு, பர்கூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக தான் தொடர்ந்து முதல் முறையாக முதல்வரானார். ஜெயலலிதா எதற்காக இந்த தொகுதியை கைவிட்டு பர்கூரை தேர்வு செய்தார்? என்பது தெரியவில்லை.
ஆனால், ஜெயலலிதா காங்கேயம் தொகுதியை கைவிட்டு பர்கூர் எம்எல்ஏவாக தொடர்ந்ததற்கும் இந்த 'சாப தொகுதி' எனும் நம்பிக்கை தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அதோடு காங்கேயம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் தான் ஜெயலலிதா அரசியலில் உச்சம் தொட்டார் என்ற பேச்சு இன்று வரை உள்ளது.
திமுக அமைச்சரின் தொகுதி
அதுமட்டுமின்றி பலரும் இந்த தொகுதியில் வென்றாலும் கூட அதன்பிறகு அரசியலில் அடையாளம் போன வரலாறுகள் உள்ளன. இதனால் இந்த தொகுதியில் பலரும் சீட் கேட்க யோசிப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த காங்கேயம் தொகுதி எம்எல்ஏவாக திமுக அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இருக்கிறார். மீண்டும் அவர் இந்த தொகுதியில் களமிறங்க சீட் கோரியுள்ளார்.
காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ., நம்பிக்கை
இதுபற்றி திருப்பூர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் கூறுகையில், ''இந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் இரண்டாவது முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலர் 2வது முறை போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. இங்கு வென்றவர்களில் ஒரு சிலர் மட்டுமே அரசியலில் உள்ளனர். பலருக்கும் அரசியலின் எதிர்காலம் சரிந்துவிட்டது.
இந்த சகுனத்தை மாற்ற அமைச்சர் சாமி நாதன் எம்எல்ஏ அலுவலகத்தை மாற்றினார். பழைய அலுவலகத்தை கைவிட்டு புதிய அலுவலகம் கட்டி திறந்தார். இந்த முறை அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுவார்'' என்றார். அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கேயம் பிரிவு செயலாளர் செல்வராஜ், ''அமைச்சர் சாமிநான் பல வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார். இதனால் இந்த தொகுதியின் சாபத்தை அவர் முறியடிப்பார்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தொகுதி மாறும் அமைச்சர்?
இதுபற்றி திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "சாமிநாதன் காங்கேயம் கேட்டுள்ளார். ஒருவேளை அவருக்கு அந்த தொகுதி கிடைக்காவிட்டால் திருப்பூர் தெற்கு அல்லது மடத்துக்குளத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது. கார்த்திகேய சிவசேனாபதிக்கு காங்கேயம் கிடைக்காவிட்டால் மொடக்குறிச்சி வழங்கப்பட வாய்ப்புள்ளது. காங்கேயம் யாருக்கு என்பதை கட்சி தலைமை தான் முடிவு செய்யும்'' என்றார். இதனால் அமைச்சர் சாமிநாதன் தொகுதி மாறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் அமைச்சர் சாமி நாதன் வேறு தொகுதிக்கு மாறுகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்து. மேலும் இந்த தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் சாமிநாதன் மட்டுமின்றி திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளரும், அயலகத் தமிழர் நல வாரியத் தலைவருமான கார்த்திகேய சிவசேனாபதியும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2021ல் அதிமுகவின் மாஜி அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து கோவை தொண்டாமுத்தூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சாபம் உடைக்கப்படுமா?
இதனால் மூடநம்பிக்கையை நம்பமாட்டோம். மூடநம்பிக்கையை ஒழிப்போம் என்று கூறி வரும் திமுக, காங்கேயம் தொகுதியில் யாருக்கு சீட் வழங்கப்படுகிறது? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை அமைச்சர் சாமிநாதன் போட்டியிட்டு வென்றால் சாபம் உடைக்கப்படும். தோற்றால் சாபம் தொடரும்.
அதேபோல் இந்த தொகுதியில் அதிமுகவை எடுத்து கொண்டால் 2011ல் வென்ற நடராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இவர் வென்றாலும் சாபம் உடைக்கப்படும். மேலும் கடந்த தேர்தலில் சாமிநாதனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ஏஎஸ் ராமலிங்கத்தின் பெயரும் அதிமுகவில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
--
-
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான்












Click it and Unblock the Notifications