Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்து அல்ல.. பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

திருப்பூர் : கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்து அல்ல. ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர, பாஜகவின் கருத்து அல்ல. இது குறித்து உயர் மட்டக் குழு முடிவு எடுக்கும் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் சோளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்ஆர். சேகர் கலந்து கொண்டார்.

செயற்குழு கூட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்ஆர். சேகர், நீட் தேர்வை கொள்கை ரீதியாக தமிழக அரசு ஏற்க வேண்டும். 7.5 சதவீதமாக உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றார்.

தமிழகத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் டில் , தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல பெட்ரோலுக்கு 5 ரூபாயும், கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாயும் குறைத்திட வேண்டும் என இன்றைய பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எஸ்.ஆர் சேகர் தெரிவித்தார்.

உயர்மட்டக்குழு முடிவெடுக்கும்

உயர்மட்டக்குழு முடிவெடுக்கும்

தொடர்ந்து பேசிய அவர், கொங்குநாடு என்பது பாஜகவின் கருத்து அல்ல. ஊடகங்களில் வெளியான செய்தியே தவிர பாஜகவின் கருத்து அல்ல. இது குறித்து உயர் மட்டக் குழு முடிவு எடுக்கும் என்றும் பாஜக மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் தெரிவித்தார்.

அதிமுக கொட்டு

அதிமுக கொட்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தனது சொந்த தொகுதியில் சிறப்பாக பணியாற்றி இருந்தால் வெற்றி பெற்றிருப்பார் என்றும் அதை செய்யாததால் அவர் தோல்வியைத் தழுவி தனது சொந்த தோல்வியை கூட்டணியின் தோல்வியாக மாற்ற முயற்சித்திருக்கிறார் என்று குற்றம்சாட்டினார். ஆனால், அதற்குதான் அதிமுகவின் தலைமையே சிவி சண்முகத்திற்கு கொட்டு வைத்து இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

பாஜக காணரம்

பாஜக காணரம்

முன்னதாக சி.வி.சண்முகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் பேசும் போது, "பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை நாம் முழுமையாக இழந்துவிட்டோம். உதாரணமாக, விழுப்புரம் தொகுதியில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுமார் 20 ஆயிரம் வாக்குகள் உள்ளன. அதில், 18 ஆயிரம் வாக்குகள் விழுப்புரம் நகரத்தில் உள்ளன. விழுப்புரம் நகரத்தில் மட்டும் 16 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளன. முந்தைய அதிமுக ஆட்சி மீது மக்களுக்குக் கோபம் கிடையாது.

Recommended Video

    Arjun sampath பேச்சு! Thani Tamil Nadu மட்டும் வேணும்..Kongunadu வேணாமா? | Oneindia Tamil
    தனிப்பட்ட கருத்து

    தனிப்பட்ட கருத்து

    ஆனால், கணக்கு சரியில்லை. கூட்டணிக் கணக்கு, சிறுபான்மையினர் வாக்கு மற்றும் சில காரணங்களால் நாம் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இதுபோன்று இல்லை என்றிருந்தால், இன்றைக்கு திமுக ஆட்சியில் வந்திருக்காது. அப்படியே தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும் கூட்டணி ஆட்சிதான் வைத்திருக்க முடியும் என்றார். இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், அதிமுக தலைமை , சிவி சண்முகத்தின் கருத்தை சொந்த கருத்து என்றும் கட்சியின் கருத்து இல்லை என்றும். பாஜக உடன் கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+