கடன் வாங்கி தேர்தல் செலவு! 50 வாக்குகள் கூட கிடைக்காத விரக்தியில் மநீம வேட்பாளர் விபரீத முடிவு!
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 36-வது வார்டில் போட்டியிட்டு 50 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெற்ற மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மணி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேர்தல் செலவுக்காக இவர் ரூ.50,000 வரை கடன் வாங்கியிருந்ததாகவும் கடைசியில் 50 பேர் கூட தனக்கு வாக்களிக்கவில்லை என்பதால் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே உயிரிழந்த மணியின் குடும்பத்திற்கு கமல்ஹாசன் என்ன உதவி செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் திமுக 37 வார்டுகளில் வென்றுள்ளது. எஞ்சிய வார்டுகளில் அதிமுக வெற்றிபெற்ற நிலையில் அந்த மாநகராட்சியில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர் டெபாசிட் தொகையை இழந்தனர். அந்த வரிசையில் மக்கள் நீதி மய்யம் 36-வது வார்டு வேட்பாளர் மணி என்பவரும் 50 ஓட்டுக்களுக்கும் குறைவாக பெற்றதால் தனது வைப்புத் தொகையை தேர்தல் ஆணையத்திடம் பரிதாபமாக பறிகொடுத்தார்.

தேர்தல் செலவு
தேர்தல் செலவுக்கு கையில் பணம் இல்லாத நிலையிலும் கடனாக ரூ.50,000 வாங்கி அதைக் கொண்டு செலவுகளை கவனித்து வந்திருக்கிறார் மணி. இதனிடையே 36-வது வார்டில் வீடு வீடாக காலையும் மாலையும் ஓட்டுக்கேட்டுச் சென்ற மணி தன்னை எப்படியும் மக்கள் வெற்றிபெற வைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவரது நம்பிக்கையை தகர்க்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்ததால் அதனை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்திருக்கிறார்.

மன உடைந்து
கடந்த மூன்று நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கமல் கட்சியின் வேட்பாளர் மணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று தற்கொலை செய்துகொண்டார். இது மக்கள் நீதி மய்யம் கட்சியினரை மிகுந்த அதிர்ச்சி அடையச் செய்துள்ளதோடு கவலையும் கொள்ளச் செய்துள்ளது. தேர்தல் தோல்வியை தாங்க முடியாமல் ஏற்கனவே அதிமுக வேட்பாளரின் கணவர் ஒருவர் உயிரிழந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கமல் தரப்பில்
இதனிடையே திருப்பூரில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதால் மனம் உடைந்து விபரீத முடிவை நாடிய மணியின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தரப்பில் என்ன மாதிரியான உதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications