திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் பரவியதா தக்காளி காய்ச்சல்? உண்மை நிலவரம் என்ன? ராதாகிருஷ்ணன் கூறிய முக்கிய தகவல்..!

Google Oneindia Tamil News

திருப்பூர் : தமிழகத்தில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் பரவியதா தக்காளி காய்ச்சல்? ராதாகிருஷ்ணன் கூறிய முக்கிய தகவல் - வீடியோ

    திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றுவரும் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

    கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமாகோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா

    பின்னர் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச டேப்லட்களை வழங்கிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    தக்காளி காய்ச்சல்

    தக்காளி காய்ச்சல்

    அப்போது பேசிய அவர்," இந்தியாவிலேயே தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரி கொண்டு வந்ததன் மூலம் ஏராளமான மாணவ மாணவிகள் பயன் அடைந்திருப்பதாகவும் , தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் முழுக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும் , கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை

    பாதிப்பு இல்லை

    பாதிப்பு இல்லை

    கேரள மாநிலத்திலும் தற்போது பாதிப்பு இல்லை என கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாகவும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். மேலும் இது குறித்து தமிழகத்தில் அச்சப்பட வேண்டியதில்லை . கேரள மாநிலத்தில் சவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழகம் முழுவதும் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தமிழகத்தில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை

    ஷவர்மாவுக்கு தடை

    ஷவர்மாவுக்கு தடை

    தமிழகத்தில் ஷவர்மாவுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும். ஆறு ஆண்டுகளுக்கு பின்பு அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி , மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்க பொதுப்பணித் துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளோம்.

    மாணவர்களிடம் பேச்சு

    மாணவர்களிடம் பேச்சு

    இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு முதலாமாண்டு மருத்துவ மாணவ மாணவியர்களிடம் பேசிய அவர், " சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள் கல்வி பயின்று பணியாற்ற வேண்டும் எனவும் சவாலான சூழ்நிலையில் கல்லூரியில் சேர்ந்துள்ள நீங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

    English summary
    Tamil Nadu Medical and Public Welfare Secretary Radhakrishnan has said that there is no truth in the allegation that the tomato virus has spread in the state and the public should not be alarmed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X