லஞ்சத்தில் திளைத்த 2 சார் பதிவாளர்கள்! வெயிட்டிங் லிஸ்டிற்கு தூக்கி அடித்த அமைச்சர் மூர்த்தி!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் லஞ்சத்தில் ஊறி திளைத்த 2 சார் பதிவாளர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி அடித்து பந்தாடியிருக்கிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.

லஞ்சம் கொடுத்தால் எதையும் பத்திரமாக எழுதிக் கொடுக்கும் ஒரு நிலையும், லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் பல்வேறு பிழைகள் இருக்கிறது பிரச்சினை இருக்கிறது என்று கூறி ஆவணங்களை நிறுத்தி வைத்து துரத்தி விடும் சூழலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் இருக்கின்றது.

Minister Moorthy has transfer 2 Sub registrars who were soaked in bribes to the waiting list in Palladam

பொய்யான, போலியான ஆவணங்களுக்கு லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு போலி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்கும் ஒரு சிலரால், பலரின் வாழ்க்கை, குறிப்பாக விவசாயிகளின் வாழ்க்கை தன்னுடைய சொத்தை மீட்பதிலேயே நீதிமன்றத்திற்கும், பிற துறைகளுக்கும் அலைந்து அலைந்தே அழிந்து வீணாக போகிறது.

இந்தச் சூழலில் பல்லடம் சார் பதிவாளர்களாக உள்ள பிரவீனா, ஈஸ்வரி என்ற இருவரையும் கண்டித்து பல்லடம் பத்திரப் பதிவு எழுத்தர்கள், முத்திரைத்தாள் விற்பனையாளர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் என பல தரப்பட்டோரும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். ரூ.1 லட்சம் வரை லஞ்சம் கேட்டால் எங்கே போவது என பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஆவேசம் காட்டி வந்தனர்.

இவர்களின் போராட்டம் காரணமாக நாளொன்றுக்கு 100 டோக்கன்கள் வரை செல்லக் கூடிய இடத்தில் வெறும் 20 டோக்கன்கள் மட்டுமே போடப்பட்டிருக்கிறது. இதனால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்த தகவலும் சார் பதிவாளர்கள் மீதான புகார்களும் அமைச்சர் மூர்த்தியின் காதை எட்டியிருக்கிறது.

Minister Moorthy has transfer 2 Sub registrars who were soaked in bribes to the waiting list in Palladam

இதையடுத்து டென்ஷனான அமைச்சர் மூர்த்தி, சர்ச்சையில் சிக்கிய 2 பெண் சார் பதிவாளர்களையும் காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கி அடித்துவிட்டு சூலூர் மற்றும் திருப்பூரில் இருந்து 2 சார்பதிவாளர்களை கூடுதல் பொறுப்பாளர்களாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+