மனு கொடுத்த அரை மணி நேரத்தில் குடிநீர் இணைப்பு! மாற்றுத்திறனாளியை மனம் குளிர வைத்த அமைச்சர்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கருக்குப்பாளையம் கிராமத்தில், தன்னிடம் மாற்றுத்திறனாளி மனு கொடுத்த அரை மணி நேரத்தில் அவரது வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி மனம் குளிர வைத்துள்ளார் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்துக்குட்பட்ட கருக்குபாளையத்தில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைப்பதற்காக சென்ற அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனிடம், மாற்றுத்திறனாளி தங்கராஜ் என்பவர் மனு ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த மனுவை ஆன் தி ஸ்பாட்டிலேயே படித்து பார்த்த அமைச்சர், அங்கிருந்தவாறே அடுத்த நொடியே உத்தரவு போட்டார்.

இதையடுத்து ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரேமலதா மனு கொடுத்த மாற்றுத்திறனாளி தங்கராஜ் இல்லத்தை பார்வையிட்டு அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாக தனி நபர் இல்ல குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பணிகள் கடகடவென முடிக்கப்பட்டு குழாய் பொருத்தப்பட்டு அதில் தண்ணீரும் வந்ததால் மாற்றுத்திறனாளி தங்கராஜ், தனது கோரிக்கை மனு மீது உடனடி ஆக்ஷன் எடுத்த அமைச்சர் சாமிநாதனுக்கு உணர்ச்சிகள் பொங்க நன்றி கூறினார்.
அதேபோல் அந்த ஊரைச் சேர்ந்த இன்னும் சிலர் கொடுத்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவர் அதனை உரிய அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு காண உத்தரவிட்டார். அமைச்சர் சாமிநாதனை பொறுத்தவரை ஊரில் இருந்தார் என்றால் தனது காங்கேயம் தொகுதியில் உள்ள கிராமங்களை ஒரு ரவுண்டு அடித்துவிடுவார்.
பொதுவிடங்களில் அமைச்சர்கள் பலரும் கண்ணியம் குறைவாக பேசி சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில் அமைச்சர் சாமிநாதன் அதில் கவனமாக இருக்கக் கூடியவர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications