கணவனுடன் சண்டை.. ஒரு வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற தாய்..!
ஒரு வயது குழந்தையை தூக்கிலிட்டு கொன்ற தாய் தற்கொலை செய்து கொண்டார்
திருப்பூர்: ஒரு வயதே ஆன பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்றுள்ளார் பெற்ற தாய்.. மேலும் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... கணவனுடன் ஏற்பட்ட சண்டையால் இந்த விபரீதம் திருப்பூரில் நடந்துள்ளது!
மதுரை மாவட்டம் வாடிபட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகர்.. 28 வயதாகிறது... இவரது மனைவி துர்காதேவி.. அவருக்கு வயது 24.. கல்யாணம் ஆகி 2 வருடங்கள் ஆகின்றன.

இவர்களது ஒரு வயது மகன்தான் ரித்திக்.. பல்லடம் பகுதியில் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் தான் பிரபாகரன் வேலை பார்க்கிறர்.. 3 மாதங்களுக்கு முன்பு அவிநாசியை அடுத்துள்ள பெரியாயிபாளையம் கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.
இந்நிலையில் நேற்று காலை கணவன் - மனைவிக்கும் வீட்டில் சண்டை வந்துள்ளது.. பிறகு வழக்கம்போல் பிரபாகரன் வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார்.. ஆனால் சாயங்காலம் வரை வீட்டைவிட்டு துர்காதேவி வெளியே வரவே இல்லை.. மாலை 7 மணி ஆகியும் கதவு சாத்தியபடியே இருந்ததால், அக்கம் பக்கத்து வீட்டார் சந்தேகம் அடைந்தனர்.
கதவை தட்டி திறந்து பார்த்தபோது துர்காதேவி, குழந்தை ரித்திக் இருவருமே தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தனர்.. இதை பார்த்து அதிர்ந்த அவர்கள் உடனடியாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் பிரேதங்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போதுதான் கணவன் மனைவி தகராறில் மனமுடைந்த துர்காதேவி தற்கொலை செய் முடிவு செய்தது தெரியவந்தது.. முன்னதாக, தன் பச்சிளம் குழந்தையை தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, அதன்பிறகு தானும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் முதல்கட்டமாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி நிறைந்த சோகத்தை திருப்பூர் பகுதியில் ஏற்படுத்தி வருகிறது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications