ரயிலில் போனா ரத்தக் கண்ணீர்.. ஏசி பெட்டியில் ஓசி பயணம்! ஜன்னலில் எகிறிக் குதிக்கும் வடக்கு நண்பர்கள்
திருப்பூர்: கடந்த சில வருடங்களாகவே ரயில் பயணங்கள் மக்களை கடும் இன்னலுக்கு ஆளாக்கி வருகிறது. குறிப்பாக முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஏசி முன்பதிவு பெட்டிகளை வட மாநில பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ரயில் பயணிகள் அத்துமீறியதாக கூறப்படுகிறது. மேலும் ஜன்னல் வழியாக ஒருவர் எகிறி குதித்த வீடியோவும் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு வகை போக்குவரத்துகள் இருந்தாலும் ரயில் போக்குவரத்தை தான் மக்கள் விரும்புகிறார்கள். காரணம் குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் தருவது ரயில்வே துறை மட்டும் தான். மேலும் குடும்பத்துடன் பயணிப்பதற்கும் நீண்ட தூர பயணங்களுக்கும் ரயில் சேவையை தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்துத் துறையான இந்திய ரயில்வே, தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே என பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்களை நாட்டின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இந்திய ரயில்வே அழைத்துச் செல்கிறது.

இதில் லட்சக்கணக்கான பணியாளர்களும் பயணிக்கின்றனர். இன்டர்சிட்டி ரயில்கள் தொடங்கி, எக்ஸ்பிரஸ் ரயில்கள், தொலைதூர ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள் என ரயில்வே ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டாலும் நெரிசலால் பயணிகள் பல நேரங்களில் கடும் இன்னலை சந்திப்பதாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக தென் மாநிலங்களில் இருந்து வட மாநிலங்களுக்கு பயணம் செய்யும்போது மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உணர்வதாக குற்றம் சாட்டுகின்றனர். பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இரண்டு முதல் மூன்று வரை மட்டுமே இணைக்கப்படுகின்றன. முன்பதிவு செய்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் பயணிக்க வேண்டிய நிலை இருக்கிறது.
இதனால் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், முன்பதிவில்லா முழு ரயிலையும் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. அதே நேரத்தில் முன்பதிவுள்ள பெட்டிகளில் முன்பதிவு இல்லாத பயணிகள் ஆக்கிரமித்துக் கொள்வதாகவும் புகார் எழுந்திருக்கிறது. வட மாநிலங்களில் இருந்து அதிக அளவு தொழிலாளர்கள் கர்நாடகா தெலுங்கானா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை நோக்கி வருகின்றனர்.
அவ்வாறு பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் ஏசி பெட்டிகளை ஆக்கிரமித்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தட்டி கேட்டால் கும்பலாக சேர்ந்து தாக்குவதாகவும் குமுறுகின்றனர் ரயில் பயணிகள். இந்த நிலையில் திருப்பூர் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்கள் ரயில்களில் அத்துமீறிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. டாலர் சிட்டி என அழைக்கப்படும் திருப்பூரில் லட்சக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முழுக்க முழுக்க ரயில் சேவையை மட்டுமே நம்பி இருக்கின்றனர்.
TTR ல் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
— நிதன் சிற்றரசு (@srinileaks) June 1, 2025
Worst.... @GMSRailway This is Tiruppur railway station. North Indians boarded the AC coach and sleeper class. One man jumped in through a window.
Many booked passengers suffered. pic.twitter.com/oFzx17FGGA
ஆனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் கிடைக்காததால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை ஆக்கிரமித்துக் கொள்வதாக புகார் எழுந்துள்ளது. நேற்று திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ஏசி பெட்டிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். பொறுமை இழந்த பயணிகள் கதவை தாழிட்டுக் கொண்ட நிலையில் ஜன்னல் வழியாக எகிறி குதித்து உள்ளே சென்ற வீடியோ வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக புகார் தெரிவித்திருக்கும் ஒருவர் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications