ரூ.1.25 கோடி மதிப்பிலான நூலை வாங்கிக்கொண்டு மோசடி.. பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி கைது
திருப்பூர்: கரூரை சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.1.25 கோடி மதிப்பிலான நூலை பெற்று மோசடி செய்த பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video
கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40). கரூரில் பணியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி (40) நடத்தி வரும் சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் நூலை கொடுத்து, தறியில் நெய்து துணியாக பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 1 லட்சம் கிலோ நூலை, துணியாக மாற்றி தரும்படி ராமமூர்த்தியிடம் கொடுத்துள்ளார்.ஆனால் நூலை பெற்றுக்கொண்ட ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நூலின் மதிப்பு ரூ.1.25 கோடியாகும்.
இது தொடர்பாக அவரிடம் கேட்ட போது, ராமமூர்த்தி நூல், துணி மற்றும் பணம் என எதையும் தரமுடியாது என மிரட்டியதாக அசோக் ராம்குமார் குற்றம்சாட்டி இருக்கிறார். இதனை தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அசோக் ராம்குமார் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் ராமூர்த்தி மீது கடந்த 30 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராமமூர்த்தியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன், ராமமூர்த்தியின் மில்லில் காசாளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications