பட்டா, நில அளவையில் தவறு.. திருப்பூரில் 4 ஏக்கர் நிலத்தின் பட்டா வேறு நபருக்கு தவறுதலாக மாற்றம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள குடிமங்கலம் கிராமத்தில் தர்ம தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருக்கிறது.இந்த தர்ம தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம், தவறுதலாக வேறு நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பட்டா, நில அளவை ஆகியவற்றை புதுப்பிக்கும் பணியின்போது, தவறுதலாக பட்டா பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகேயுள்ள குடிமங்கலம் என்ற கிராமம் அமைந்திருக்கிது. இந்த கிராமத்தில் செயல்பட்டு தர்ம தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் இருக்கிறது. தண்ணீர் பந்தல் அறக்கட்டளைக்கு இந்த நிலத்தை சுப்பா நாயக்கன் என்பவர் 1917-ம் ஆண்டு வழங்கியதாக கூறப்படுகிறது.

patta of 4 acres of land belonging to the Tiruppur Trust was mistakenly transferred to a person

தனிநபர்களுக்கு பட்டா

ஆனால் இந்த நிலத்தை தனி நபர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் சுப்பா நாயக்கரின் சட்டப்பூர்வ வாரிசுகளில் ஒருவரான கே.சவுந்தரராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அந்த மனுவில், சுப்பா நாயக்கனின் சட்டப்பூர்வமான வாரிசுகளில் ஒருவரான விஜயலட்சுமி இந்த நிலம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்திருக்கிறார். அப்போது அந்த நிலத்தின் பட்டா வெங்கடசாமி நாயக்கன் என்பவர் பெயரில் உள்ளது என்பது தெரிய வந்தது. தற்போது, நாகரத்தினம் உள்பட 9 பேர் ஆக்கிரமித்திருக்கிறார்கள்..


அரசு நடவடிக்கை இல்லை

அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்று மற்றொரு வாரிசுதாரர் ரங்கராஜ் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார். நானும் (சுப்பா நாயக்கர்) 2021-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவே இல்லை..

தனிநீதிபதி உத்தரவு

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. எனவே, இந்த பட்டா விவகாரம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று சுப்பா நாயக்கர் கூறியிருந்தார்.

4 ஏக்கர் நிலம்

இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், கே.கோவிந்தராஜன் திலகவதி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.கங்காதரன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளீடர் டி.கே.சரவணன் ஆஜராகி வாதிடும் போது, "பட்டா, நில அளவை ஆகியவற்றை புதுப்பிக்கும் பணியின்போது, தவறுதலாக பட்டா பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. வருவாய்த்துறை கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந் தேதி பிறப்பித்த அரசாணையின்படி, தவறுதலாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்து, நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும்" என்றார்.

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர்

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'இந்த வழக்கில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். அவர் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பிடம் விசாரணை நடத்தி, யார் உண்மையான உரிமையாளரோ அவர்கள் பெயருக்கு பட்டாவை வழங்க வேண்டும்'' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பட்டா தவறுகள்

பட்டா வாங்கும் போது நில அளவையில் தவறு நடந்தால், உங்கள் நிலத்திற்கு பத்திரமே இருந்தாலும், பக்கத்து நிலத்தில் உள்ளவருக்கும் சேர்த்து பட்டா போய்விடும். ஆனால் அப்படி நில அளவையில் தவறு ஏற்பட்டு பட்டா வழங்கப்பட்டுவிட்டால், நீங்கள் நில அளவையரை சந்தித்து பழைய பட்டாவை ரத்து செய்து இருவருக்கும் புதிய பட்டா வாங்க விண்ணப்பிக்க வேண்டும்.. கவனிக்காமல் விட்டால், அவர் கட்டிடம் கட்டிவிடுவார். அதன்பிறகு பெரிய சிக்கலை நீங்கள் சந்திக்க வேண்டியதிருக்கும்..

பத்திர அளவு

எனவே பட்டா அளவும் பத்திரத்தில் உள்ள அளவும் சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள். அதேபோல் கண்ணை மூடிக் கொண்டு பத்திரப்பதிவில் உள்ள அளவை நம்ப வேண்டாம்.. நிலத்தின் உண்மையான அளவு என்ன..அதாவது அரசின் உண்மையான ஸ்கெட்சில் உள்ள அளவு பத்திரப்பதிவு செய்யப்படுகிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.. அப்படி உறுதி செய்யாமல் போனாலும் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+