திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரான்ஸ்பார்மரில் ஏறிய அணில்.. "டமால்" சத்தம்.. போனது கரண்ட்.. திருப்பூர் வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் டிரான்ஸ்பார்மரில் அணில் ஏறியதால் மின் தடை ஏற்பட்டது. மின் ஊழியர்கள் எடுத்த இது தொடர்பான, வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Recommended Video

    டிரான்ஸ்பார்மரில் புகுந்த அணில்.. திருப்பூரில் மின் தடை.. வைரலாகும் வீடியோ

    திருப்பூர் சந்தைப்பேட்டை பகுதியில் நேற்று மதியம் டிரான்ஸ்பார்மரில் மிகப்பெரிய வெடி சத்தம் கேட்டது.

    பின்னர் உடனடியாக மின் இணைப்பும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டது. இதனால் என்ன நடக்கிறது என மக்களுக்கு புரியாமல் டிரான்ஸ்பார்மர் பகுதியை நோக்கி விரைந்தனர்.

    கொரோனா 3ஆம் அலை.. இதுவரை இல்லாத கொடூரமான பாதிப்பு.. தென் ஆப்பிரிக்கா நமக்கு உணர்த்தும் பாடம் என்னகொரோனா 3ஆம் அலை.. இதுவரை இல்லாத கொடூரமான பாதிப்பு.. தென் ஆப்பிரிக்கா நமக்கு உணர்த்தும் பாடம் என்ன

    அணில் சிக்கியிருந்தது

    அணில் சிக்கியிருந்தது

    தகவலறிந்து அங்கு சென்ற மின் ஊழியர்கள் டிரான்ஸ்பார்மர் மேலே ஏறி பார்க்கும் போது டிரிப்பரில் அணில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் மின் ஊழியர் மணி அந்த இறந்து போன அணிலை எடுத்து கீழே போட்டுவிட்டு மீண்டும் டிரான்ஸ்பார்மரை சரி செய்தார்.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    பராமரிப்பு பணிகள் நடைபெற்ற பிறகு மின் இணைப்பு சீரானது. இந்த சம்பவத்தின் போது மின் ஊழியர்கள் அணில் தொடர்பாக எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    மின்வெட்டு பிரச்சினை

    மின்வெட்டு பிரச்சினை

    தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு அடிக்கடி மின்வெட்டு ஏற்படத் தொடங்கியது. இதனால் ஆன்லைன் வகுப்புகளில் படிப்பவர்கள், வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் போன்ற பலதரப்பினரும் தொல்லைகளை அனுபவித்தனர். இது தொடர்பாக புகார்கள் எழுந்ததால் விளக்கமளித்தார் அந்த துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

    அணில்கள் காரணம்

    அணில்கள் காரணம்

    செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் கடந்த பத்து வருடங்களாக நடைபெற்ற அதிமுக ஆட்சி காலத்தில் புதிதாக மின் திட்டங்கள் தொடங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தினார். மேலும் 9 மாதங்களாக பராமரிப்பு பணிகளை அதிமுக அரசு செய்யவில்லை, மின்கம்பங்களில் அணில் தாவி விளையாடுவதும் மின்வெட்டுக்கு காரணம் தெரிவித்தார். இதை பாஜக மற்றும் அதிமுகவினர் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ததால் இந்த சம்பவத்திற்கு பிறகு சில பகுதிகளில் அணில்கள் காரணமாக மின்வெட்டு ஏற்படுவதை புகைப்பட ஆதாரங்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Power cut happened in Tirupur due to Anil, video goes viral on social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X