நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து.. ட்யூட்டியில் இருந்த காவலர் உள்ளிட்ட 6 பேர் பலி!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கோர சாலை விபத்தில் காவலர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் ஈடுபட்டிருந்த போது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் காவலர், லாரி ஓட்டுநர், காரில் பயணம் செய்த 4 பேர் என 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் உத்தாண்ட குமாரவலசு பிரிவு அருகே வெள்ளகோவில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி திருச்சி கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

இன்று அதிகாலை 3 மணியளவில் சோதனைச் சாவடி அருகே இருந்த சாலை தடுப்பு மீது சவுக்கு கட்டை ஏற்றி வந்த லாரி மோதி உள்ளது இதை அடுத்து லாரியை தூரம் தள்ளி நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் மற்றும் அங்கு பணியில் இருந்த ரவிக்குமார் என்ற காவலர் அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே திசையில் அதி வேகத்தில் வந்த மகேந்திரா சைலோ வகை கார் ஒன்று லாரி ஓட்டுநர் மற்றும் பணியில் இருந்த காவலர் ரவிக்குமார் மீது மோதி விட்டு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் கார் உருக்குலைந்து காரில் வந்த பெண் ஒருவர் உட்பட 4 பேர் சாலையில் நின்று கொண்டிருந்த காவலர் மற்றும் லாரி ஓட்டுநர் என 6 பேர் சம்பவ இடத்தில் பலியாயினர்.
இதனால் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்தில் திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் காங்கேயம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புட் வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இறந்த 6 பேரின் சடலங்களை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications