திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னது காருக்குள்ள எறும்பு கூட போகாதா.. உள்ளே யார் படுத்திருக்கானு செத்த உத்துப் பாருங்கோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    பிஎம்டபிள்யூ காருக்குள் புகுந்த நாகப்பாம்பு-வீடியோ

    திருப்பூர்: திருப்பூரில் அதி நவீன பிஎம்டபியூள் காரின் உள்ளே பெரிய நாகப்பாம்பு சுருண்டு படுத்திருந்த நிகழ்வானது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

    குண்டு துளைக்காத கார் என்பார்கள்.. கடைசியில் அது விபத்தில் சிக்கி துண்டு துண்டாக கிடக்கும். எப்படி மோதினாலும் உடையாத ஹெல்மட் என்பார்கள்.. கடைசியியல் அந்த ஹெல்மட்தான் உயிர் போக காரணமாக இருந்திருக்கும். அந்த மாதிரியான ஒரு சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

    காருக்குள் எறும்பு கூட போகாது என்று கூறிய நிலையில் அந்தக் காருக்குள் பெரிய நாகப்பாம்பு சுருண்டு படுத்திருந்த செயல் திருப்பூரை அதிர வைத்துள்ளது.

    [30 அடி ஆழ கிணறு.. உள்ளே விழுந்த யானை.. மீண்டு வந்து "டொய்ங் டொய்ங்" என நடந்து போனது!]

    கல்யாணத்திற்குப் போன இடத்தில்

    கல்யாணத்திற்குப் போன இடத்தில்

    ஒரு பனியன் நிறுவன நிறுவனரும், அவரது மகனும், திருப்பூரில் இருந்து முத்தூர்-க்கு 8ம் தேதி திருமணத்திற்காக பிஎம்டபிள்யூ காரில் பயணித்துள்ளனர். ஹை என்ட் கார் என்பதால் மணிக்கு சுமார் 120 கீ.மீ வேகத்தில் வந்துள்ளனர். காரை நிறுவனரின் தம்பி மகன் ஓட்டினார்.

    காங்கயம் அருகே

    காங்கயம் அருகே


    காங்கயத்தை தாண்டும் பொழுது பாம்பின் மேல் கார் ஏறியுள்ளது. ஆனால் அவர் அதை கவனிக்கவில்லை. சிறிய குழி என்று நினைத்து வந்து விட்டார் .
    முத்தூர் அருகே வரட்டுக்கரை என்னும் ஊர் வரும் பொழுது பாம்பு காரின் முன்னால் படம் எடுத்துள்ளது. அதை கண்ட இருவரும் அதிர்ச்சி அடைந்து வரட்டுக்கரை அருகே தென்னங்கரைப்பாளையம் பிரிவு அருகே வெளிச்சத்தில் நிறுத்தியுள்ளனர்.

    ஒளிந்து கொண்டது

    ஒளிந்து கொண்டது

    அருகில் உள்ளவர்கள் வந்து பார்க்கும் பொழுது பாம்பு காருக்குள் ஒளிந்து கொண்டது. உடனே தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து சுற்று முற்றிலும் பார்த்து விட்டு பாம்பு ஓடிவிட்டது என்று சொல்லி சென்று விட்டனர். ஆனால் காரில் வந்த இருவருக்கும் சந்தேகம் போகவில்லை. பிஎம்டபிள்யூ கார் நிறுவனத்திற்கே போனைப் போட்டனர்.

    என்னாது பாம்பா

    என்னாது பாம்பா

    அதற்கு அந்த நிறுவனம் காருக்குள் எறும்பு கூட போகாது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் காலையில் காரை கொண்டு வாருங்கள் பார்ப்போம் என கூறியுள்ளனர். அடுத்த நாள் காலையில் காரை கோவை கொண்டு சென்றனர். பிஎம்டபிள்யூ நிறுவன சர்வீஸ் சென்டருக்கு காரை எடுத்துச் சென்றனர். அங்கு மெக்கானிக்குகள் காரை அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்ந்து பார்த்தனர். அப்போது, இடது பக்க சீட்டுக்கு அடியில் அந்த நாகப்பாம்பு அழகாக சுருண்டு படுத்திருந்தது.

    English summary
    A long size Snake was found in BMW car in Tirupur and it was taken out of the car by Snake experts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X