திருப்பூர் டூ கோவையில் அதிரடி.. இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளின் SIR கள ஆய்வு.. இன்று முதல் ஆரம்பம்
திருப்பூர்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மும்ரமாகி வரு நிலையில், வாக்காளர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்ப பெறப்பட்டு. அவை தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் பதிவேற்றமும் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறி்த்து இன்று முதல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று தமிழகம் வருகை தர உள்ளனர்.
இந்தியாவில் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR - Special Intensive Revision) நடைபெற்று கொண்டிருக்கிறது.. இதற்காக தேர்தல் ஆணையம் வீடு வீடாக கணக்கெடுப்பு மேற்கொள்ளும் வகையில் திட்டமிட்டிருக்கிறது..

சார் - விண்ணப்ப படிவங்கள்
அந்தவகையில், கடந்த 4ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை இப்பணிகள் நடைபெற உள்ள நிலையில், இந்த ஒரு மாத காலத்திற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக சென்று சார் படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி வருகின்றனர். இதுவரை 90 சதவீதத்துக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலையில், அவை திரும்ப பெறப்பட்டு ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை எதிர்த்து திமுக உட்பட தமிழ்நாடு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது விசாரணையில் இருந்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை
இந்நிலையில, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை குறித்து இன்று முதல் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தர உள்ளனர்.
கள ஆய்வுகள்
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த பி. பவன், துணை இயக்குநர் தேவன்ஷ் திவாரி ஆகியோர் இன்று முதல் 26 வரை சென்னையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கட்டம்-II குறித்த ஊடக ஒருங்கிணைப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்வார்கள். அதைத் தொடர்ந்து, அவர்கள் கள அளவிலான ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
இன்று தமிழகம் வரும் அதிகாரிகள்
கூடுதலாக, இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார் திவாரி, இச்சிறப்பு தீவிர திருத்த செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, குறிப்பாக மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் மற்றும் அதன் டிஜிட்டல் முறை உள்ளீடு குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு வருகை தருவார்.
இதேபோல், செயலர் மதுசூதன் குப்தா சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்குச் சென்று சிறப்பு தீவிர திருத்தம் பற்றி ஆய்வு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை இன்று முதல் நவம்பர் 26ம் தேதி வரை உயரதிகாரிகள் கள ஆய்வு மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது வாக்காளர்களின் கவனத்தை குவித்து வருகிறது.
-
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications