அமைச்சரின் இளமை ரகசியம்! முதலமைச்சர் பேச பேச வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வந்த அழகான வெட்கம்!
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மு.பெ.சாமிநாதனை மூப்பே அடையாத சாமிநாதன் என்றும் இளமையாவே காட்சி அளிப்பார் எனவும் குறிப்பிட்டார்.
முதலமைச்சர் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் முகத்தில் அப்படியொரு பூரிப்பும், வெட்கமும் வெளியே எட்டிப்பார்த்தது. போதாகுறைக்கு அருகில் அமர்ந்திருந்த அமைச்சர்கள் முத்துசாமியும், இளித்துறை ராமச்சந்திரனும் சாமிநாதனை கலாய்க்க அந்த இடமே கலகலப்பானது.

அமைச்சர் சாமிநாதனின் இளமை பற்றி முதல்வர் பேசியதாவது;
''மேற்கு மண்டல கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தை மிகச் சிறப்போடும் எழுச்சியோடும் ஏற்பாடு செய்திருக்கிற செய்தித் துறை அமைச்சர் என்னுடைய அருமை சகோதரர் மு.பெ.சாமிநாதன் அவர்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
மு.பெ. என்பது அவரது முன்னெழுத்தாக இருந்தாலும், உண்மையில் அவர் மூப்பே அடையாத சாமிநாதன் என்று சொல்லத்தக்க வகையில் இளமையாவே காட்சி அளிப்பார். இளைஞரணியில் என்னுடன் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்தவர் சாமிநாதன்.
வெள்ளக்கோவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து மாநில இளைஞரணிச் செயலாளர் என்ற தகுதிக்கு உயர்ந்தவர் அவர். இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு என்னிடம் இருந்து அவருக்குத்தான் போனது. அதில் இருந்தே அவரின் உழைப்பையும் திறமையையும் தெரிந்து கொள்ளலாம்.

தலைவர் கலைஞர் அமைச்சரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றினார். இப்போது, நம்முடைய அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராகப் பணியாற்றி வருகிறார். நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஏற்ப, அடக்கமாகவும் - அமைதியாகவும் - அதே நேரத்தில் பொறுப்பை உணர்ந்தும் பணியாற்றக் கூடியவர்தான் சாமிநாதன்.
அவருக்கு தோளாடு தோள் நின்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நிர்வாகிகள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை மீண்டும் ஒருமுறை தலைமைக் கழகத்தின் சார்பிலும், என்னுடைய சார்பிலும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.''
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications