சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்க தாராபுரத்தில் தி.க சார்பில் பிரியாணி விருந்து
சூரிய கிரகணத்தை முன்னிட்டு தாராபுரம் திராவிட கழகம் சார்பில் பிரியாணி விருந்து நடைபெற்றது. கிரகணத்தின் போது சாப்பிட்டால் தோஷம் என்று சொன்னதை முறியடிக்கவே இவ்வாறு செய்ததாக திராவிடர் கழகத்தின்ர் கூறினர
திருப்பூர் : சூரிய கிரகணத்தின்போது சாப்பிட்டால் தோஷம் கெடுதல் வரும் என்று கூறப்படும் நிலையில் அந்த நம்பிக்கையை உடைக்கும் வகையில் இன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கிரகணம் உச்சகட்டத்தில் இருந்த போது பிரியாணி விருந்து சாப்பிட்டனர். தாராபுரத்தில் பெரியார் சிலை முன்பு இந்த பிரியாணி விருந்து நடைபெற்றது.
இந்து கங்கண சூரியகிரகணம் நிகழ்ந்தது. காலை 9.15க்கு தொடங்கி மாலை 3 மணிவரை சூரிய கிரகணம் நிகழ்ந்தது. கோவில்களில் நடை அடைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் காலை10:30 மணி முதல் பல்வேறு பகுதிகளில் சூரிய கிரகணத்தின் தென்பட்டது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைகுறிச்சி கரந்தை இடை குடித் தெரு சூரிய கிரகணத்தை முன்னிட்டு உலக்கை செங்குத்தாக நின்றபடியே இருந்ததை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டுச் சென்றனர். இந்த கிரகணம் நிகழும் நேரத்தில் வெளியே நடமாடக்கூடாது எதையும் சாப்பிடக்கூடாது, சமைக்கக்கூடாது என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை மூட நம்பிக்கை என்று ஒரு சாரார் சொல்கின்றனர்.
தாராபுரம் நகர திரவிடர் கழகம் சார்பில் இன்று பிரியாணி விருந்து நடைபெற்றது. இந்த சூரிய கிரகணம் விஞ்ஞான ரீதியில் எந்த ஒரு பலனும் நிகழ்வு இல்லை என்பதை காட்டவே ஏற்பாடு செய்திருந்தனர் மேலும் இந்த கிரகணம் மனிதர்களுக்கு எதுவும் செய்வதில்லை என்பதை நிரூபித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட செயலாளர் சண்முகம்,நகர தலைவர் சங்கர்,நகர செயலாளர் மணி,நாத்திகன் மாவட்ட அமைப்பாளர் தொழிலாளர் அணி,ஒன்றிய செயலாளர் முருகன், தோழர் சுப்பிரமணி,சமூக சேவகர் சிவசங்கர்,குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications