மின்சார வாரியம் சர்ப்ரைஸ்? பீக் ஹவர் கட்டணம் குறையுதா? முதல்வர் ஸ்டாலின் வரை விஷயம் போயிருச்சே.. செம
திருப்பூர்: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின்கட்டணம் குறித்து, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மின்கட்டண உயர்வையும் கண்டித்து சரமாரி கேள்வி எழுப்பி வருகிறார்.

திமுக அமைச்சர்: "திமுக வந்தாலே மின்தடை வரும். திமுக அரசின் பொம்மை முதலமைச்சர், 2வது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்திவிட்டார்" என்று குற்றஞ்சாட்டியதுடன், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், எடப்பாடியின் தொடர் குற்றச்சாட்டுக்கு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.. அத்துடன், தமிழக மக்களுக்கு பெருத்த நம்பிக்கையையும் அளித்துள்ளார்.
களப்பணிகள்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் பேசும்போது, "எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களை தக்க வைக்க எவ்வளவோ முயன்று பார்க்கிறார். அவரது இயலாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இங்கு, 200 பேர் அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தனர்.
இங்கு, அதிமுகவே இல்லை.. அப்படி இருப்பவர்கள் பாஜகவினராக மாறிவிட்டனர். யாரும் களப்பணிக்கு செல்வதில்லை என்று புதிதாக இணைந்தவர்கள் சொல்கிறார்கள்.. முன்னாள் அமைச்சர் வேலுமணி பிரசாரம் செய்கிறாரா? செய்வது போல நடிக்கிறாரா என்ற சந்தேகம் உள்ளது. "இந்தியா" கூட்டணியில் குளறுபடிகள் ஏற்பட வேண்டும் என, எதிரணியினர் நினைக்கின்றனர். கவர்னராக இருந்தவர் பாஜக வேட்பாளராக நிற்பது கேவலமாக இல்லையா?
பீக் ஹவர்: "உதய்" மின் திட்டத்தில் அதிமுக செய்த மிகப்பெரிய துரோகம் இன்று வரை தமிழகத்தை பாதித்து வருகிறது. இதனால் ஏற்பட்ட கடன் சுமையிலிருந்து சிறிது, சிறிதாக தமிழகம் மீண்டு வருகிறது. "பீக் ஹவர்" கட்டண பிரச்சனையை முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளோம். தீர்வுக்கான வாய்ப்பு உள்ளது" என்றார்.
கோடை காலம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், மின்தடை பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்படாது என்றும், "பீக் ஹவர்" கட்டண பிரச்சனையை முதல்வரிடம் கொண்டுசென்றிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்திருப்பது, தமிழக மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications