உங்கள் வீட்டில் எத்தனை கேஸ் கனெக்ஷன்.. மத்திய அரசு போட்ட புதிய ரூல்ஸ் தெரியுமா?
திருப்பூர்: எல்பிஜி இணைப்பிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி வந்தது. அதன்படியே பலரும் மாறத்தொடங்கிவிட்டார்கள். பலர் வேகமாக மாறி வருகிறார்கள். இந்நிலையில் ஏற்கெனவே வீடுகளில் பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இனி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்வது முற்றிலும் தடை செய்துள்ளது மத்திய அரசு. இனி ஒரே நபர் அல்லது ஒரே வீட்டில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது.
ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் ஏற்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணைய் வழித்தடத்தின் இதயம் என்று அழைக்கப்படும் 'ஹார்முஸ் நீரிணை' மூடப்பட்டதால், இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு சிலிண்டர் கிடைக்க கிராமங்களில் 50 நாட்கள் வரை ஆகிறது. நகரங்களில் 36 நாட்கள் வரை ஆகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஹோட்டல்கள் சிலிண்டர் இல்லாத காரணத்தால் மூடப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அந்த வகையில் நேற்று ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மார்ச் மாதத்தில், கணிசமான எல்பிஜி வாடிக்கையாளர்கள் 3 மாத காலத்திற்குள் எல்பிஜி இணைப்பிலிருந்து குழாய்வழி இயற்கை எரிவாயுவிற்கு மாற வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியது. உதாரணமாக மெட்ரோ நகரங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் உடனடியாக மாற அறிவுறுத்தப்பட்டனர். சிலிண்டர்களை மேல் தளங்களுக்குச் சுமந்து செல்வதில் உள்ள சிரமத்தைத் தவிர்க்கவும், இடவசதியைச் சேமிக்கவும் இவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டது.
அதேபோல் பெரிய அளவில் எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்தும் வணிக அமைப்புகள் PNG-க்கு மாற அதிகம் அறிவுறுத்தப்பட்டனர். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை சமையலறைகள், கல்யாண மண்டபங்கள் போன்றவற்றை கேஸ் சிலிண்டருக்கு பதில், குழாய் வழி எரிவாயுவைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது என அரசு அறிவுறுத்தி வந்தது. அதேபோல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிலகங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளில் வெப்பமூட்டும் தேவைகளுக்காக எல்பிஜி அல்லது பிற எரிபொருட்களைப் பயன்படுத்தி வந்தவர்கள் இயற்கை எரிவாயுவிற்கு மாற அறிவுறுத்தப்பட்டனர்
அதன் படி பலரும் பிஎன்ஜிக்கு மாற தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஏற்கனவே வீடுகளில் பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, இனி எல்பிஜி சிலிண்டர் விநியோகம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது அதாவது, இனி ஒரே நபர் அல்லது ஒரே வீட்டில் எல்பிஜி மற்றும் பிஎன்ஜி ஆகிய இரண்டு இணைப்புகளையும் வைத்திருக்க முடியாது.
பிஎன்ஜி இணைப்பைப் பெற்ற பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் எல்பிஜி இணைப்புகளைத் துண்டிப்பதற்கு அரசாங்கம் 30 நாட்கள் அவகாசம் வழங்கி இருக்கிறது. எனினும் இந்த வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தால், எதிர்காலத்தில் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெறுவதற்காக ஒரு வவுச்சரைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கும் ஒரு விதியையும் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
ஒருவேளை வாடிக்கையாளர் எல்பிஜி இணைப்பை துண்டிக்க விரும்பவில்லை என்றால், அவர் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு சிறப்பு மாற்றுச் சீட்டைப் பெறலாம். இந்தச் சீட்டு எதிர்காலத்தில் அவர்களின் எல்பிஜி இணைப்பை மீண்டும் பெற முடியும்.
இந்த மாற்றுச் சீட்டுப்படி, நகரங்களில் இருக்கும் மக்கள் பிஎன்ஜி இணைப்பைப் பெறும்போது அவர்கள் தங்களது பழைய எல்பிஜி சிலிண்டரை ஒப்படைப்பார்கள். ஆனாலும் அவர்கள் ஒரு சிறிய நகரம், ஊர் அல்லது பிஎன்ஜி குழாய்கள் இல்லாத பகுதிக்கு மாறும்போது ஒரு புதிய எல்பிஜி இணைப்பைப் பெறுவதற்கு நீண்ட ஆவணப் பணிகளையும் கணிசமான செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமை இருக்கும்.
ஆகவே தான் அரசின் புதிய மாற்றுச் சீட்டு விதி எளிதாகும். அதாவது இந்த சீட்டை காண்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் பிஎன்ஜி இல்லாத பகுதிகளில் தங்களது எல்பிஜி இணைப்பை எளிதாக உடனே மீண்டும் வாங்கிவிட முடியும்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications