தாராபுரம் அமராவதி ஆற்றில் 64 புதைகுழிகள்.. நீர் ஆர்ப்பரித்து வரும்போது.. இப்படித்தான் நடக்குது
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் இருந்து தொடங்கும் அமராவதி ஆறு 76 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூர் அருகே காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் 25 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, 147 கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் தாராபுரம் அமராவதி ஆற்றில் 64 புதைகுழிகள் இருப்பதாகவும், எனவே உயிரிழப்பை தடுக்க, பெரிய எழுத்துகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
பழனி மலைத்தொடருக்கும் ஆனைமலைத் தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் அமராவது ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றில் தான் உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணைக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது. 1956ம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த அணை கட்டப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து சமவெளியில் தொடங்கும் அமராவதி ஆறு 76 கிலோ மீட்டர் பயணம் செய்து கரூர் அருகே காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றில் 25 தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளது. 147 கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. கொங்கு மக்களின் முக்கியமான ஜீவ நதிகளில் அமராவதி ஆறும் ஒன்று. பவானி, நொய்யல் போல், இதுவும் காவிரி ஆற்றின் துணை நதியாக இருக்கிறது.
அமராவதி ஆறு நீர் மூலம் ராபுரம் முதல் கரூர் வரை சுமார் 50ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறார்கள். திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் செழிப்பாக விவசாயம் நடைபெற அமராவதி ஆறு முக்கியமான காரணம் ஆகும். கடந்த காலங்களில் அமராவதி ஆற்றில் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மர்ம நபர்கள் தொடர்ந்து மணல் திருட்டு நடந்தது.
இதனால் அந்த பகுதியில் பள்ளம் ஏற்பட்டு, புதை குழியாக மாறி விட்டது. அமராவதி ஆற்றில் மட்டும் 64 புதைக்குழிகள் உள்ளன. அமராவதி ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து வரும்போது தாராபுரம் மட்டுமல்லாது அந்த வழியாகச் செல்லும் மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கின்றனர். அவ்வாறு குளிக்கும்போது அமராவதி ஆற்றில் உள்ள புதைக்குழிகள் தெரியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி 264 பேர் இறந்துள்ளனர். எனவே போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தி மணல் கடத்தலை தடுக்க வேண்டும். மேலும் புதை குழிகள் உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை பெரிய அளவில் வைக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications