வங்கதேசம் வேஸ்ட்.. மீண்டும் திமிறி எழும் திருப்பூர்! வரிசை கட்டி வரும் ஆர்டர்! வேலைவாய்ப்பு பெருகுது
திருப்பூர்: வங்கதேசத்தில் தரமான ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பப்படாததால் சர்வதேச அளவில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் நாட தொடங்கி இருக்கின்றனர் இறக்குமதியாளர்கள். இதன் காரணமாக திருப்பூரில் மீண்டும் உற்பத்தி சூடு பிடித்திருந்தாலும் ஆட்கள் பற்றாக்குறையால் உற்பத்தியாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
’டாலர்’ சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களின் தாயகமாக விளங்குகிறது. ஆண்டுக்கு சுமார் 14,000 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் நிலையில் இந்திய அளவில் பொருளாதார முக்கிய மையமாகவும் விளங்குகிறது.

பனியன் தொழிலே பிரதானமாக இருந்து நிலையில் தற்போது வெளிநாடுகளுக்கு ஆடைகளும் குளிர்காலத்திற்கு தேவையான ஆடைகளும் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவுக்கு அந்நிய செலாவணியை பெற்றுத் தருவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பின்னலாடை உற்பத்தி: திருப்பூர் மட்டுமல்லாது தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது பனியன் தொழில் விரிவடைந்து இருக்கிறது. அந்த அளவுக்கு திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை தொழில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நூல் உற்பத்தி செய்யப்பட்டு ஈரோட்டில் துணியாக தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து திருப்பூருக்கு கொண்டு செல்லப்படும் அந்த துணிகள் சாயம் ஏற்றப்பட்டு ஆடைகளாக தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதி சரிவு: வெளிநாடுகள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதுக்கும், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் ஆடைகள் அனுப்பப்படுகின்றன. திருப்பூரை பொறுத்தவரை சாயம் ஏற்றுதல் துணியை சலவை செய்தல் அதற்குப் பிறகு கட்டிங் செய்து ஆடைகளாக தயாரித்து பேக்கிங் செய்யப்பட்டு பண்டல்களாக கண்டைனர் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த தொழிலில் சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே நூல் விலை உயர்வு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சிக்கல்கள் காரணமாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி வெகுவாக சரிந்தது.
மீண்டும் ஆர்டர்கள்: மேலும் வங்கதேசத்தில் திடீரென பின்னலாடை தொழில் எழுச்சி பெற தொடங்கியதால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கேயே ஆர்டர்களை கொடுத்தனர். மேலும் டாலர் மதிப்பின் ஏற்றத்தாழ்வு காரணமாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் வங்கதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் சரியாக பினிஷிங் செய்யப்படாமல் இருப்பதாக வெளிநாட்டு இறக்குமதியாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இதை அடுத்து மீண்டும் திருப்பூருக்கு ஆர்டர்கள் வந்து குவிய தொடங்கி இருக்கின்றன.
ஆட்கள் பற்றாக்குறை: ஆர்டர்கள் குவிந்து திருப்பூர் புத்துயிர் பெரும் அதே நேரத்தில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள். திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அங்கு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆடை தொழில் மட்டுமல்லாது ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்தியாவின் 29 மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு கேரளா தொழிலாளர்கள் அங்கு அதிகம்.
தொழிலாளர்கள் இல்லை: தற்போது வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பின்னலாடை தொழிலில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதன் காரணமாக தற்போது அங்கு ஆர்டர்கள் கிடைத்துள்ள போதிலும் தொழிலாளர்கள் பற்றாக்குறையானது ஏற்பட்டு இருக்கிறது.

உற்பத்தியாளர்கள் வேதனை: இந்த நிலையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை குறித்து நம்மிடம் பேசிய பின்னலாடை உற்பத்தியாளரான முத்துராஜ்,”கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் உற்பத்தி நன்றாக இருந்தது. தொழிலாளர்களும் தேவைக்கு அதிகமாகவே இருந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட சுணக்கம் காரணமாக பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். திருப்பூரில் சாயம் ஏற்றுதல், சலவை செய்தல், கட்டிங் மாஸ்டர், பிரின்டிங் மாஸ்டர், சிங்கர், டெய்லர், பேக்கிங், அயர்னிங் மாஸ்டர் என பல்வேறு தொழிலாளர்களுக்கு தற்போது தேவை இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் தேவை என்ற போர்டுகளை பார்க்க முடிகிறது. இருந்த போதும் ஆர்டர்களை அனுப்புவதற்காக இருக்கும் ஆட்களை வைத்து தொழில் செய்து கொண்டிருக்கிறோம்”என்கிறார்.

திரும்புவார்களா தொழிலாளர்கள்?: இதேபோல் நம்மிடம் பேசிய மற்றொரு பின்னலாடை உற்பத்தியாளரான ஜீவானந்தம்,”திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை தற்போது வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள் . அவர்கள் கட்டுமானம் பேக்கிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்த தான் பயன்படுத்த முடியும். தமிழ்நாட்டு தொழிலாளர்கள் கட்டிங் டெய்லரிங் அயனிங் சாயம் ஏற்றுதல் உள்ளிட்ட வேலைக்கு ஆட்கள் தேவை இருக்கிறது. அவர்கள் அதனை சிறப்பாகவும் செய்து முடிப்பார்கள். ஆனால் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இதன் காரணமாக ஏற்றுமதி செய்வதில் சற்று சுணக்கம் இருக்கிறது. அதே நேரத்தில் இருக்கும் தொழிலாளர்களை வைத்து ஆர்டர்களை முடிந்தவரை செய்ய முயற்சித்து வருகிறோம். வரும் காலங்களில் தொழிலாளர்கள் தேவை இன்னும் அதிகரிக்கும். அதே நேரத்தில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று இருக்கும் நிலையில் அதனை சமாளிக்கும் வகையில் தொழிலாளர்கள் மீண்டும் திருப்பூருக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.
நல்ல வேலைவாய்ப்பு: திருப்பூரைப் பொருத்தவரை 2011க்கு பிறகு அங்கு பின்னலாடை தொழில் பெரும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாகத்தான் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். தற்போது அங்கு மீண்டும் தேவை அதிகரித்திருக்கும் நிலையில் தொழிலாளர்கள் குறிப்பாக வேலை தேடும் இளைஞர்கள் திருப்பூரில் செல்லலாம். கல்வி தகுதிக்கு ஏற்ற வேலைகளும் அங்கு உண்டு. மேலும் படிக்காத இளைஞர்களுக்கும் நல்ல ஊதியத்தில் தங்குமிடத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலையில் அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்கின்றனர் தொழில்துறையினர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications