"வைகோ மகன் துரை வைகோ சின்னப்பையன்".. மதிமுகவிலிருந்து விலகுகிறாரா துரைசாமி? ஆதரவாளர்களுடன் ஆலோசனை
திருப்பூர்: மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ சின்னப்பையன் என்றும் அவருக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்றும் திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
வாரிசு அரசியல் என்ற ஒற்றை வார்த்தை அரசியலில் அவ்வப்போது கேள்விபட்டு வருகிறோம். அந்த வகையில் திமுகவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படைத் தளபதியாக இருந்தவர் வைகோ. கடந்த 1990 களில் தனது மகன் ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என வைகோ குற்றம்சாட்டினார்.

ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலினை முன்னிலைப்படுத்தியதால் கோபமடைந்த வைகோ திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக என்ற கட்சியை உருவாக்கினார். நீண்ட காலமாக கருணாநிதியுடன் பேசாமல் இருந்த வைகோ அவர் மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போது கண்ணீருடன் சென்று நலம் விசாரித்தார்.
அப்போதே ஸ்டாலினை முதல்வராக்குவேன் என கருணாநிதியிடம் சூளுரைத்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து திமுகவுடன் மதிமுக கூட்டணி அமைத்தது. வைகோ மாநிலங்களவை உறுப்பினரானார். இந்த நிலையில் வைகோவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி துரை வைகோவும் மதிமுகவின் வளர்ச்சிக்காக சிலவற்றை செய்து வந்தார்.

இதையடுத்து துரை வைகோவுக்கு கட்சியில் பதவி கொடுக்க வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் வைகோவிடம் கோரிக்கை விடுத்தனர். வாரிசு அரசியலை அறவே விரும்பாத வைகோ மகனுக்கு பதவி கொடுக்க மாட்டார் என மூத்த தலைவர்கள் நம்பினர். இதையடுத்து மதிமுக பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டு அதில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் பதவி துரை வைகோவுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு மதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிகழ்வுக்கு எதிரப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதனால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்து வைகோ உத்தரவிட்டிருந்தார்.

அவ்வப்போது மதிமுகவிலிருந்து துரை வைகோவுக்கு எதிராக போர்க்கொடி எழத்தான் செய்கிறது. அந்த வகையில் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் மதிமுகவை தொடங்கிய போது தங்களின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிப்பூர்வமான பேச்சைக் கேட்டு ஏராளமான தொண்டர்கள் கட்சியில் இணைந்தனர்.
ஆனால் அண்மைக்காலமாக அவரது குழப்பமான செயல்பாடுகள் காரணமாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டனர். மேலும் கட்சியில் மகனை அரவணைப்பதும், தற்போதைய சந்தர்ப்பவாத அரசியலும் தமிழக மக்களை எள்ளி நகையாட வைத்து விட்டது.
இதை வைகோ உணராமல் இருப்பது வேதனையளிக்கிறது. மதிமுக தொடங்கப்பட்டது முதல் 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்கள் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க மதிமுகவை தாய் கழகமான திமுகவுடன் இணைப்பதுதான் சமகால அரசியலுக்கு சால சிறந்தது என வைகோவை கடுமையா சாடி கடிதம் எழுதியுள்ளார் துரைசாமி.
இதற்கு பதில் அளித்த துரை வைகோ மதிமுகவை திமுகவுடன் இணைக்க நிர்வாகிகள் யாரும் விரும்பவில்லை. மூத்த நிர்வாகி என்பதால் துரைசாமி மீது எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் துரைசாமி கூறுகையில் வைகோ மகன் துரை வைகோ சின்னப்பையன். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.
எனது கடிதம் தொடர்பாக வைகோ பதிலுக்காக காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ள அவர், திருப்பூரில் தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு வேளை இந்த கடிதத்திற்கு வைகோ பதில் சொல்லாவிட்டால், துரைசாமி மதிமுகவிலிருந்து விலகுவாரா என்ற சந்தேகம் எழுகிறது.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications