காங்கேயத்தில் கொடூர கார் விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரின் உயிரை காவு வாங்கிய மரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள காங்கேயம் பகுதியில் கேரளத்தில் இருந்து வந்து கொண்டிருந்த கார் மரத்தின் மீது விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து சாலை விபத்துகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வாகனங்களை இயக்கும்போது செல்போன்களில் பேசுவது, அதிவேகம், விதிமுறைகளை மீறுவது போன்ற செயல்பாடுகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் சாலை விபத்துகள் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், திருப்பூரை அடுத்த காங்கேயத்தில் கேரளத்தில் இருந்து வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் செவ்வாய்க்கிழமை பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அரச்சலூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜானகி (வயது 42) என்பவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் ராஜா (46). இத்தம்பதிக்கு ஹேமிநேத்ரா (15), மெளன ஸ்ரீ (10) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் நான்கு பேரும் தங்களுடைய சொந்த ஊரான கேரளத்துக்குச் சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து இன்று மீண்டும் அரச்சலூருக்கு காரில் திரும்பியுள்ளனர்.
கேரளத்தில் இருந்து காரை ராஜா ஓட்டி வந்துள்ளார். காங்கேயம் வழியாக அரச்சலூருக்குச் சென்று கொண்டிருந்தபோது நத்தக்காடையூர் அருகே மரத்தில் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து, அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ராஜா, ஜானகி மற்றும் ஹேமிநேத்ரா ஆகியோர் உயிரிழந்தனர்.
இரண்டாவது மகளான மெளன ஸ்ரீ பலத்த காயமடைந்திருந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான ராஜாவின் காரில் ஏராளமான நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நகைகைளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications