Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூர் "ரவுடிபேபி" சூர்யா திடீர் தற்கொலை முயற்சி.. அக்கம் பக்கத்தினர் மீட்டனர்.. தீவிர சிகிச்சை

டிக்டாக் சூர்யா திடீர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: ரவுடிபேபி சூர்யா இன்று காலை திடீரென தூக்கு போட்டு தொங்க முயன்றுள்ளார். தற்கொலைக்கு முயன்ற அவரை அருகில் இருந்தவர்கள்தான் பார்த்து சூர்யாவை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. அங்கு சூர்யாவுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியும் வருகிறது.

Recommended Video

    TikTok புகழ் ரவுடி பேபி சூர்யா திடீர் தற்கொலை முயற்சி

    டிக்டாக் புகழ் சூர்யாவின் இயற்பெயர் சுப்புலட்சுமி.. தன் நடிப்பு திறமையை காட்ட டிக்டாக்கிற்குள் நுழைந்தவர். நாளடைவில் லைக்குகளை அள்ள அள்ள.. அரைகுறை டிரஸ்களும் அதிகமானது.. ஆபாச பேச்சுக்களை சர்வசாதாரணமாக பேசி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார்.

    இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். ஒரு கட்டத்தில் ஆபாச பதிவுகள், மோசமான விமர்சனங்கள் சூர்யாவை ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.

    கெட்ட வார்த்தை

    கெட்ட வார்த்தை

    இதனால், கெட்ட கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக பேச ஆரம்பித்தார் சூர்யா.. விளைவு,, டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள் என்று கண்ணீருடன் ஒரு பேட்டியும் தந்தார். இப்போது மீண்டும் இவரது பெயர் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது.

    சிங்கப்பூர்

    சிங்கப்பூர்

    இதற்கு காரணம், திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யா,சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றவர், லாக்டவுனால் அங்கேயே தங்க நேர்ந்துவிட்டது.. பிறகு ஸ்பெஷல் விமான சேவைகள் துவங்கியுள்ளதால், கடந்த 16-ம்தேதி ஃபிளைட்டில் கோவை வந்தார்.. அங்குள்ள ஒரு லாட்ஜிலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    அக்கம் பக்கம் வீடுகளில் இருந்தவர்களின் அச்சம் காரணமாக, அவரை கொரோனா டெஸ்ட்டுக்கு அழைத்து செல்ல போலீசார் வந்தபோது, "இங்க பாருங்க.. நான் சிங்கப்பூரில் ஏசி ரூம்லேயே இருந்துவிட்டேன்.. தமிழ்நாட்டு வெயிலில் இவங்க கிட்ட இருந்து எனக்கு கொரோனா பரவி விடுமோன்னு பயமா இருக்கு.. அதனால அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம் எனக்கு வேணும்.. தனி சாப்பாடு வேண்டும்.. அங்கே நான் ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது.. என்னை நிம்மதியாவும் ரசிகர்கள் இருக்க விட மாட்டாங்க.அப்படி நீங்க தனி ரூம் தரலேன்னா என்றால் பிரச்சினை செய்வேன்" என்று கூறியிருந்த வீடியோ வைரலானது.

    டிவி சேனல்

    டிவி சேனல்

    இதையடுத்து, 2 நாளைக்கு முன்பு ஒரு தனியார் டிவி சேனல் செய்தியாளரை கடும் கோபத்துடன் மிரட்டி ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.. "நேத்து நான் ரயில்வே ஸ்டேஷன் செக்-அப் வந்தேன்.. 2,3 டைம் என்னை வீடியோ எடுத்தே.. உன்னை யாருன்னு கேட்டேன்.. நீ சொல்லல.. ஐ.டி. எதுவும் உன்கிட்ட இல்லை.. சூர்யா ஏர்போர்டில் இருந்து பாதுகாப்பை மீறி தப்பிச்சு ஓடிவந்தார்னு ஏன் நியூஸ்போடுறே? மோடி ஐயா போட்ட ஃபிளைட்லயும், கோவை கலெக்டர் ஐயா போட்ட கன்ட்ரோலையும் மீறிநான் தப்பிச்சி வந்து நான் இப்படி திமிரா பேச முடியாது.. உன் டிவி டிஆர்பி ஏத்தணும்னா என்னை பத்தி போடாதே.. என்னை எல்லாம் சீந்தாதே.. நாறிடுவே.. சரியா.. கொன்னுடுவேன்" என்றார்.

    மிரட்டல் வீடியோ

    மிரட்டல் வீடியோ

    ஒரு செய்தியாளரை சூர்யா மிரட்டிய இந்த வீடியோ பெரும் பரபரப்பை தந்த நிலையில், அந்த செய்தியாளர் சூர்யா மீது புகார் தந்தார்.. இதையடுத்து வீரபாண்டி போலீசார் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள்தான் அதை பார்த்து சூர்யாவை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.. அங்கு சூர்யாவுக்கு தீவிரமான சிகிச்சை நடந்து வருகிறது.. சூர்யா எதனால் தற்கொலை செய்து கொள்ள முயன்றார், என்ன காரணம், என்பது உடனடியாக தெரியவில்லை.. இது சம்பந்தமாக விசாரணையையும் போலீசார் துவக்கி உள்ளனர்.. இந்த தற்கொலை முயற்சி சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியும் வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+