Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனி ரூம் வேணும்.. தொற்று தொத்திக்கும்.. ரவுடி பேபி சூர்யாவின் அக்கப்போர்.. டெஸ்ட் எடுத்தாச்சு!

கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள ரகளை செய்தார் டிக்டாக் புகழ் சூர்யா

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: "எனக்கு தனி ரூம் வேணும்.. என்னால ஃப்ரீயா பாத்ரூம் போக முடியாது.. என்னை நிம்மதியா இருக்க விட மாட்டாங்க.. எனக்கு அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம், ஸ்பெஷல் சாப்பாடு வேணும்.. அப்பதான் கொரோனா டெஸ்ட்டுக்கு வருவேன்" என்று ரவுடி பேபி சூர்யா, போலீசாரிடம் ரகளை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது... ஒருவழியாக பரிசோதனைக்கு வர சம்மதித்த அவரிடம் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டும் விட்டது.. இன்றுதான் அந்த டெஸ்ட் ரிசல்ட் வரப்போகிறது!

Recommended Video

    தனி அறை கொடுத்தால் தான் வருவேன்... அடம் பிடித்த ரவுடி பேபி
    tiktok surya: rowdy baby surya quarantine and demand

    டிக்டாக் புகழ் சூர்யா, மலேசியாவை சேர்ந்தவர்.. தன் நடிப்பு திறமையை காட்ட டிக்டாக்கிற்குள் நுழைந்தவர்.. நாளடைவில் லைக்குகளை அள்ள அள்ள.. அரைகுறை டிரஸ்களும் அதிகமானது.. ஆபாச பேச்சுக்களை சர்வசாதாரணமாக பேசி வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார்.

    ரவுடி பேபி சூர்யா என்றால் டிக்டாக்கில் ரொம்பவும் ஃபேமஸ். இந்த பெண்ணுக்கு லைக்குகள் லட்சக்கணக்கில் ஏறி கொண்டே போகின்றன.. இதற்கு முக்கிய காரணம் அவரது டிரஸ்கள்தான்.. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.. ஆனால், நாளுக்கு நாள் சூர்யாவின் அட்டகாசத்தை பார்த்து, அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    ஒரு கட்டத்தில் ஆபாச பதிவுகள், மோசமான விமர்சனங்கள் சூர்யாவை ரொம்பவே பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.. இதனால், கெட்ட கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக பேச ஆரம்பித்தார் சூர்யா.. விளைவு,, டிக்டாக்கில் உள்ள நபர்களை பாலியல் தொழிலுக்கு அழைக்கிறார்கள் என்று கண்ணீருடன் ஒரு பேட்டியும் தந்தார். இப்போது மீண்டும் இவரது பெயர் பலமாக அடிபட ஆரம்பித்துள்ளது..

    திருப்பூர் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவராம் இவர்.. சில மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றவர், லாக்டவுனால் அங்கேயே தங்கிவிட்டார்.. விமான போக்குவரத்து இல்லாமல் சிக்கி கொண்டிருந்தார்.. பிறகு ஸ்பெஷல் விமான சேவைகள் துவங்கியுள்ளதால், 2 தினங்களுக்கு முன்பு ஃபிளைட்டில் கோவை வந்தார்.. அங்குள்ள ஒரு லாட்ஜிலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நேற்று திருப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு சூர்யா வந்து சேர்ந்தார்.. சூர்யா சிங்கப்பூரில் இருந்து வந்துவிட்டதால், அக்கம் பக்கத்தினருக்கு கொரோனா பீதி வந்துவிட்டது.. அதனால் வீரபாண்டி போலீசாருக்கும் சுகாதார துறையினருக்கும் தகவல் தந்தனர்.. இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகளும், சூரியாவை அரசு ஆஸ்பத்திரிக்கு டெஸ்ட்டுக்கு அழைத்து செல்ல வந்தனர்.

    அப்போது போலீசாரிடம் "இங்க பாருங்க.. நான் சிங்கப்பூரில் ஏசி ரூம்லேயே இருந்துவிட்டேன்.. தமிழ்நாட்டு வெயிலில் இவங்க கிட்ட இருந்து எனக்கு கொரோனா பரவி விடுமோன்னு பயமா இருக்கு.. அதனால் அரசு ஆஸ்பத்திரியில் தனி ரூம் எனக்கு வேணும்.. தனி சாப்பாடு வேண்டும்.. அங்கே நான் ஃப்ரீயா பாத்ரூம் கூட போக முடியாது.. என்னை நிம்மதியாவும் ரசிகர்கள் இருக்க விட மாட்டாங்க.அப்படி நீங்க தனி ரூம் தரவில்லை என்றால் பிரச்சினை செய்வேன்" என்றார்.

    ஆனால், திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் மதியம் 2 மணி வரை மட்டுமே கொரோனா டெஸ்ட் செய்யப்படும் என்பதால், நேற்றிரவு ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்படவுள்ள டெஸ்ட்டுக்கு அவரை சுகாதார துறையினர் அழைத்து சென்றனர்.. நீண்ட நேர அடாவடிக்கு பிறகு ஆம்புலன்சில் ஏறி ரயில்வே ஸ்டேஷனில் நடந்த டெஸ்ட்டுக்கு வந்தார் சூர்யா.. அங்கு அவருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.. அந்த ரிசல்ட் இன்னைக்குதான் வர போகுதாம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+