வயிறு வலின்னு சொன்னேன்.. பேண்டை கழட்டுங்கன்னு டாக்டர் சொன்னாரு.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: ஆஸ்பத்திரிக்கு போய், தனக்கு வயிறு வலி இருப்பதாக பெண் கூறிய நிலையில், அங்கிருந்த டாக்டர் பேன்டை கழட்டுங்க என்று கூறிய சம்பவம் திருப்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவ படிப்பு 3ம் ஆண்டு படித்து வருகிறார் அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண் . இவர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் திருவிழாவிற்காக ஊருக்கு வந்துள்ளார்.

Tirupattur doctor asked woman to take off her pant when she complained of abdominal pain

நேற்று இரவு அமுதாவிற்கு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.மாத்திரை சாப்பிட்டால் சரியாகும் என்று மாத்திரை சாப்பிடிருக்கிறார். ஆனாலும் அவருக்கு வலி குறையவில்லையாம்.

பக்கத்தில் 24 மணி நேர மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த மருத்துவமனைக்கு அமுதா சென்றுள்ளார். அங்கு என்ன நடந்தது என்பதை குறித்து ஊடகங்களிடம் அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, நான் வயிறு வலி என்று 24 மணி நேர மருத்துவனைக்கு சென்றேன்.

அங்கு வயிறு வலிக்கிறது என்று டாக்டரிடம் கூறினேன். ஆனால் டாக்டர், வயிறு வலிக்கிறது என்று கூறிய என்னை பேண்ட்ஐ கழட்டுமாறு கூறியதுடன், அப்போது தான் செக் பண்ண முடியும், அப்போது தான் என்ன பிரச்சனை என்று தெரியும். அப்படி செய்தால் தான் நான் பார்ப்பேன் என்று டாக்டர் தகாத வார்த்தையில் பேசினார். இதை நான் வீட்டில் போய் சொன்னேன்.வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படி பேசுனீங்க என்று கேட்டால், நாங்கள் ஆஸ்பத்திரியை அடித்து உடைத்துவிட்டோம் என்று போலிசில் புகார் கொடுத்துவிட்டு, எங்களால் பாதிக்கப்பட்தாக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டு, எங்கள் மேல் கேஸ் கொடுத்துள்ளார்கள்.

ஆனால் பெண்ணாகிய நான் புகார் கொடுத்தால் அதனை காவல்துறையில் எடுத்துக் கொள்ள மறுக்கிறார்கள். ஏற்கனவே 8 மாததத்திற்கு முன்பு நான் போகும் போது இதுபோல் நடந்தது. இனி அப்படி நடக்காது என்று சொல்லி அனுப்பினார்கள்.. ஆனால் மறுபடியும் நடந்துள்ளது. நாங்கள் ஆஸ்பத்திரியில் போய் கேட்ட போது, அங்கிருந்த நர்ஸ் இனிமேல் இப்படி நடக்காது.. இந்த ஒரு முறை மன்னிச்சிடுங்க என்று கூறினார்.

ஆனால் போலீஸ் ஸ்டேசனில் வந்து நாங்கள் ஆஸ்பத்திரியை அடித்து உடைச்சதாக புகார் கொடுத்திருக்காங்க.. அத்துடன் தகாத முறையில் கூறவில்லை, நாங்க எங்களை அடிக்காதீங்க என்று தான் சொன்னோம் என்று விசாரணையில் கூறியிருக்கிறார்கள். ஆஸ்பத்திரியில் ஒரு மாதிரியும், காவல்துறையில் ஒரு மாதிரியும் பேசுறாங்க.. தப்பே பண்ணாத மாதிரி பேசுறாங்க.. நோயாளிங்க வந்தாங்கன்னா.. அவங்களை எப்படி பார்க்கனுமோ, அப்படித்தான் பார்க்கனும்.. தேவையில்லாம தப்பா பேசுறது.. தப்பா இதுபண்றது .. அதெல்லாம் பண்ணக்கூடாது"இவ்வாறு அந்த பெண் கூறினார் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+