திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய உச்சம் தொட்ட நூலின் விலை.. மே 16 முதல் வேலை நிறுத்தம் அறிவிப்பு! பரபர தகவல்

Google Oneindia Tamil News

திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கோரி வரும் மே 16 முதல் 21ஆம் தேதி வரை 6 நாட்கள் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.

Tiruppur baniyan factory workers announced protest as Thread price continue to raise

திருப்பூர் பின்னலாடை மற்றும் ஏற்றுமதி தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்தி என வர்த்தகம் செய்து வரும் நகராகத் திருப்பூர் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நூல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாகக் கடந்த மாதம் நூல் விலை 30 ரூபாய் உயர்ந்து, 440 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு ஜவளி துறையில் அனைத்து தரப்பினரையும் அப்போதே பின்னலாடை நிறுவனங்கள் தெரிவித்தன.

இதனிடையே அனைத்து நூல் ரகங்களின் விலை மேலும் 40 ரூபாய் உயர்த்தப்படுவதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் நூல் விலை 480 ரூபாய் என புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பழைய ஆர்டர்களை முடிக்க முடியாமல் பின்னலாடை துறையினர் திணறி வருகின்றனர்.

மேலும் புதிய ஆர்டர்கள் பெறுவதிலும் விலை நிர்ணயத்தில் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர், இதன் காரணமாகப் பின்னலாடை நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இது குறித்துக் குறித்து திருப்பூரின் அனைத்து சங்கங்களும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது காங்கேயம் சாலை தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூர் பின்னலாடை சார்ந்த சங்கங்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மூலப் பொருட்களான பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் பருத்தி மற்றும் நூலை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எது வடை 350 ரூபாயா! பச்சை தண்ணீர் 100 ரூபாயாம்.. தோசை விலை கேட்டால் ஆடி போவீங்க! இது இலங்கை நிலை எது வடை 350 ரூபாயா! பச்சை தண்ணீர் 100 ரூபாயாம்.. தோசை விலை கேட்டால் ஆடி போவீங்க! இது இலங்கை நிலை

மேலும் மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கை உணர்த்தும் விதமாக மே மாதம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை ஆறு நாட்கள் அனைத்து பனியன் மற்றும் பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்கள் முழுவதுமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதன் காரணமாக நாளொன்றுக்கு 200 கோடி ரூபாய் அளவிலான உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

English summary
As Thread price continue to raise, Tiruppur baniyan factory protest: (திருப்பூரில் பணியான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம்) Tiruppur baniyan factory workers announced protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X