பெயிலான நானே ஐஏஎஸ் ஆயிட்டேன்! குறைந்த மார்க்கால் தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு கலெக்டர் ஊக்கம்! செம
திருப்பூர்: ‛‛நானே 10ம் வகுப்பு பெயில் ஆகி தான் கலெக்டராகி உள்ளேன். உன்னால் முடியாதா?'' என 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்ற மாணவனை எதிர்பாராத விதமாக மருத்துவமனையில் சந்தித்த திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஊக்கமளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிறிஸ்து ராஜ் உள்ளார். இவர் அடிக்கடி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு திடீர் ஆய்வு மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சரியாக பணிக்கு வருவது இல்லை என்ற புகார் எழுந்தது.

மேலும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மருத்துவுமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர் எனவும் அவருக்கு புகார்கள் சென்றனர். இந்நிலையில் தான் இன்று கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த வேளையில் அங்குள்ள நோயாளிகளை சந்தித்து சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இந்த வேளையில் தான் 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெற்று வரும் மாணவனை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவனை ஊக்கப்படுத்தும் வகையில் அவர் பேசினார்.
அப்போது கலெக்டர் கிறிஸ்து ராஜ், ‛‛20ம் வகுப்பில் பெயில் ஆன பிறகு மீண்டும் தேர்வு எழுதி படித்த நான் கலெக்டராகி விட்டேன். உன்னால் முடியாதா? இப்போது தான் நாம் தைரியமாக இருக்க வேண்டும். மேலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். தொடர்ந்து நன்றாக படி. பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடு. நம்மால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வந்ததும் எனக்கு செல்போனில் அழைத்து கண்டிப்பாக கூற வேண்டும்'' என ஊக்கப்படுத்தினார்.
அதோடு, ‛‛நானும் உனது பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசுகிறேன். விளையாட்டில் ஆர்வம் இருந்தால் நன்றாக விளையாடு. எதை பற்றியும் கவலை படாதே. உறுதியோடு நல்ல முறையில் படிக்க வேண்டும். தோல்வி என்பது முடிவு அல்ல. தோல்வி தான் வெற்றிக்கான அடுத்த படிக்கட்டு'' என அறிவுரை வழங்கினார்.
இதனை கேட்ட மாணவனும் நிச்சயம் நன்றாக படிப்பதாக தெரிவித்தான். மேலும் மாணவனின் குடும்பத்தினர் கலெக்டரின் ஊக்கத்துக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் பல்லடம் அரசு மருத்துவமனையில் இன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications