திருப்பூரில் ஒரே திகைப்பு.. கோபாலகிருஷ்ணன் கலெக்டர் ஆபீசில் டக்குனு இப்படியா பண்றது? ஆடிப்போன போலீஸ்
திருப்பூர்: திருப்பூர் கோபாலகிருஷ்ணன் எடுத்த முடிவை கண்டு, திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகமே திணறி போய்விட்டது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி வருகிறார்கள்.. கோபாலகிருஷ்ணன் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன நடந்தது?
நம்முடைய தமிழகத்தில், இளைய தலைமுறையினரிடம் ஆன்லைன் சூதாட்ட மோகம் அதிகரித்து காணப்படுகிறது. இதுபோன்ற விளையாட்டுகளில் பணத்தை இழந்த எத்தனையோ பேர், பரிதாபமாக தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.

அதனால்தான், ஆன்லைன் விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இணைய விளையாட்டுத் தொடர்பான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பதிவு செய்வதற்கும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி நசிமுதீன் தலைமையில் தமிழ்நாடு இணைய விளையாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இணையத்தில் பணம் கட்டி விளையாடுவதற்கும் ஆணையம் தடை விதித்திருக்கிறது.
புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணிவரை ஆன்லைன் விளையாட்டுகளில் பயனர்களை அனுமதிக்கக்கூடாது, பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ஒருவர் ஆன்லைன் விளையாட்டில், வாரத்திற்கு, மாதத்திற்கு எவ்வளவு பணம் செலவிடுகிறார் என்ற விவரத்தை அவருக்கு இணைய விளையாட்டு நிறுவனம் தெரியப்படுத்த வேண்டும்" என்றெல்லாம் உத்தரவிட்டுள்ளார்.
இதுஒருபுறமிருந்தாலும், திருப்பூரில் ஒருவர் சோக முடிவை எடுக்க துணிந்துவிட்டார்.. திருப்பூர், காந்தி நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு 45 வயதாகிறது.. மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் - மனைவி 2 பேருமே அருகிலுள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.
அதிர்ச்சியும், ஏமாற்றமும், வேதனையும்
ஆனால், கோபாலகிருஷ்ணன் சரியாக வேலைக்கு போவது கிடையாதும்.. எப்ப பார்த்தாலும், கிளப்களுக்கு சென்று சீட்டு விளையாடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்..
இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பு, ஊத்துக்குளி அருகே உள்ள ஒரு கிளப்பில் சீட்டு விளையாடி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்துவிட்டார்.. இந்த ஏமாற்றத்தை கோபாலகிருஷ்ணனால் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. விரக்தியும், அதிருப்தியும் அடைந்த கோபால கிருஷ்ணன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம்
இதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கையோடு கொண்டு வந்திருந்த பெட்ரோலை உடம்பில் ஊற்றி, தீக்குளிக்க போனார்.. இதைப்பார்த்த அங்கிருந்த போலீசார், பெட்ரோல் கேனை பறித்துவிட்டு, கோபாலகிருஷ்ணன் மீது தண்ணீர் ஊற்றினார்கள்.. பிறகு அவரிடம் விசாரித்தபோது, தன்னைப்போல் யாரும் சீட்டு விளையாடி பணத்தை இழந்துவிடக்கூடாது என எச்சரிப்பதற்காகவே தீக்குளிக்க முயன்றதாக போலீசாரிடம் சொன்னார்.
பிறகு, போலீசார் கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனால், கலெக்டர் அலுவலக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications