Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்.. திருப்பூரில் அரசுக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: கேரள மாநில அரசு விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள் முதல் செய்கிறது. மேலும் அரசுக்கு சொந்தமான ஆலைகளிலும், தனியார் ஆலைகளிலும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அதுபோல் தமிழ்நாட்டிலும் கொப்பரையை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தினசரி காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 471 ஹெக்டேர் அளவிற்கு தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிலேயே அதிகமாக கோவை மாவட்டத்தில் 88,467 ஹெக்டேர் பரப்பளவும், அதற்கு அடுத்தப்படியாக திருப்பூர் மாவட்டத்தில் 58,550 ஹெக்டேரும் உள்ளது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, பழநி, நிலக்கோட்டை, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் 31,000 ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுகிறது.

Tiruppur farmers demand that coconut oil be provided in ration shops instead of palm oil

இதுதவிர தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டின் அனைத்த மாவட்டங்களிலும் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாடு தான் தேங்காய் உற்பத்தியில் இந்தியாவிலேயே 3வது இடத்தில் இருக்கிறது. பல, வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் தேங்காய் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தேங்காய்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் வகையில், தேங்காய்களை உலர்த்தி கொப்பரைகளான பின்பு, அதை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் ஆலைகளுக்கு விவசாயிகள் அனுப்புகிறார்கள்.

கேரளாவை பொறுத்தவரை அம்மாநிலத்தில், அம்மாநில அரசே விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள் முதல் செய்து, அரசுக்கு சொந்தமான ஆலைகளிலும், தனியார் ஆலைகளிலும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. அதேபோல், கொப்பரை தேங்காய்க்கு நிரந்தரமான விலை கிடைக்க, தமிழக அரசும் விவசாயிகளிடம் இருந்து கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நியாயமான விலையை உறுதி செய்வதற்காக ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெயை விநியோகிக்க வேண்டும் என்ற விவசாயிகள் பலமுறை கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்கள் ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய்க்கு பதிலாக அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை வாங்கத் தயாரா என்பதைக் கண்டறிய மாநில சிவில் சப்ளைஸ் துறை ஒரு கணக்கெடுப்பு கடந்த ஆண்டு நடந்தது.

பல மாவட்டங்களின் ரேஷன் கடை மேற்பார்வையாளர்களுக்கு அட்டைதாரர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான படிவங்கள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் ஆய்வுக்கு பின்னர் அரசு கொப்பரையை கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு தினசரி காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியுடன் தமிழ்நாடு தினசரி காய்கறி உற்பத்தியாளர்கள் சங்க இணைப்பு விழா திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த 63 வேலம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. அப்போது அவர்கள் கூறும் போது, அவினாசி -அத்திக்கடவு திட்டத்தால் காய்கறி விளைச்சல் அமோகமாக விளைந்திருப்பதால் திருப்பூர் உழவர் மற்றும் தினசரி மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் காய்கறிகளை தடை செய்ய வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்து விட்டு தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை நிபந்தனையின்றி வேளாண் தொழிலுக்கு மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+