திருப்பூரில் கணவனின் உல்லாச கொடுமை.. திருப்பத்தூரில் வீட்டுக்கே வந்த கள்ளக்காதலி.. பரிதாப மனைவிகள்
திருப்பூர்: தகாத உறவுகள் குடும்பங்களில் பெருகி, அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.. இதுபோன்ற கள்ளக்காதல் அட்டகாசங்களால் தம்பதிகளின் குடும்பமே நாசமாகிவிடுறது.. இவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடுகிறது.. இந்நிலையில், திருப்பூரை போலவே திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த கள்ளக்காதல் கொடுமை, அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இது தொடர்பான விசாரணையையும் ஜோலார்பேட்டை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஒரு வாரத்துக்கு முன்பு திருப்பூரில் ஒரு கள்ளக்காதல் கொடுமை நடந்தது.. ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி மீனா என்பவருக்கு 21 வயதாகிறது..

இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. சிவக்குமார் - கீர்த்தி மீனா தம்பதியினர் தற்போது திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்..
மனைவியிடம் காட்டிய உல்லாச வீடியோ
இந்நிலையில், சிவக்குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் கீர்த்தி மீனாவுக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.. இதுகுறித்து சிவக்குமாரிடமும் கேட்டுள்ளார். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
காதலித்து திருமணம் செய்த கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதை நினைத்து, கீர்த்தி மீனா மனம் வேதனையடைந்தார்.. அந்த நேரத்தில், சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கீர்த்தி மீனா, குழந்தையை தூங்க வைத்துவிட்டு புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வீரபாண்டி போலீசாரும், ஆர்டிஓவும் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
ஜோலார்பேட்டை அம்மு
இந்த அதிர்ச்சி முடிவதற்குள் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் மற்றொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.. பொன்னேரி அருகே சின்னா கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்பாண்டி.. லாரி டிரைவரான இவருக்கு வயது 38..
இவரும், அதேபகுதியை சேர்ந்த அம்மு என்ற பெண்ணை காதலித்து 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்களும் உள்ளனர்..
இந்தநிலையில், அருள்பாண்டிக்கும், அம்முவின் உறவுக்கார பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது.. அந்த உறவுக்கார பெண்ணும் ஏற்கனவே திருமணமானவர்தான்..
எனினும் கள்ளக்காதல் ஜோடி கடந்த 4 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது..
வீட்டிற்கே வந்த கள்ளக்காதலி
நேற்றிரவு அருள்பாண்டி திடீரென தன்னுடைய கள்ளக்காதலியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.. இனிமேல் அவர் நம்முடன்தான் வசிப்பார் என்று அம்முவிடம் அருள்பாண்டி கூறியிருக்கிறார்.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அம்மு, கள்ளக்காதலி இருப்பதுடன், 4 வருடங்களுக்கு முன்பு திருமணமே நடந்துவிட்டதா? என்று பேரதிர்ச்சி அடைந்தார்..
2 பிள்ளைகள் வீட்டில் இருப்பதால், அந்த பெண்ணை தங்க விடமாட்டேன் என்றும் அம்மு கூறியிருக்கிறார். ஆனால், அருள்பாண்டி மனைவியிடம் ஆவேசமாக தகராறு செய்தார்.
இதனால் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்த அம்மு, வீட்டின் மாடிக்கு சென்று விஷம் குடித்துவிட்டார்.. இதில் அங்கேயே மயங்கி கீழே விழுந்துவிட்டார்..
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை
நீண்ட நேரமாகியும் அம்மு கீழே வராததால் குடும்பத்தினர் அவரை தேடி மாடிக்கு சென்றபோதுதான், அவர் சுயநினைவின்றி கீழே விழுந்து கிடப்பது தெரிய வந்தது.
உடனடியாக அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர்.. ஆனால் அம்மு இறந்துவிட்டார்.. இதுகுறித்து அம்முவின் அம்மா ஆனந்தி, ஜோலார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications