Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பூரில் கள்ளக்காதலர்களை சேர்த்து வைத்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்.. அதுவும் கணவன், மனைவி முன்னாடியே

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: பொதுவாக காதல் ஜோடிகள் வீட்டிலுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், அல்லது குடும்பத்தினரின் கொலை மிரட்டலுக்கு பயந்து, பாதுகாப்பு தேடி, காவல் நிலையங்களில் தஞ்சம் அடைவார்கள்.. போலீசாரும் காதல் ஜோடிகளின் விருப்பத்தையும், வயதையும் அறிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து பாதுகாப்பு தருவார்கள். ஆனால், இங்கே ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் வைஷ்ணவி.. இவருக்கு 22 வயதாகிறது.. இவர் தன்னுடைய சொந்த தாய்மாமனையே திருமணம் செய்து கொண்டார்.. தற்போது இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்..

Tiruppur Illegal Couple Female Sub Inspector

கடந்த சில மாதங்களுக்கு ஊரில் திருவிழா நடந்துள்ளது.. இதில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யா (24) என்பவர் வந்துள்ளார்.. இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. அப்போதுதான் வைஷ்ணவியும், சூர்யாவும் சந்தித்து கொண்டனர்.. ஒரே ஊர் என்பதால் இவர்களின் பழக்கம் நட்பாக வளர்ந்தது.

இதற்கு பிறகு செல்போன் நம்பரை மாற்றிக் கொண்டு இருவரும் அடிக்கடி பேசிவந்தார்கள்.. நாளடைவில் இந்த நட்பு கள்ள உறவாக மாறியிருக்கிறது. இதனால் எந்நேரமும் போனிலேயே மூழ்கியிருந்தனர்.. வைஷ்ணவியின் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர், கண்டித்துள்ளார்.. தகாத உறவு கூடாது என்று அறிவுறுத்தினார்.

திருப்பூரில் ரகசிய உல்லாச வாழ்க்கை

அதேபோல சூர்யா வீட்டிலும் பிரச்சனை வெடித்துள்ளது.. சூர்யாவை அவரது மனைவி எச்சரித்து தகராறு செய்துள்ளார். ஆனால் கள்ளக்காதலர்கள் இருவருமே தங்களது உறவை கைவிட தயாரில்லை.. நாளுக்கு நாள் தங்களது வீடுகளில் எதிர்ப்பும், கண்டிப்பும் அதிகமாகிவிட்டதால், குடும்பம், குழந்தைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள்.. திருப்பூரில் ரகசியமாக குடும்பமும் நடத்தி வாழ ஆரம்பித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த 2 குடும்பத்தினரும் வேடசந்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினார்கள்.. காதலர்கள் 2 பேர் மீதும் புகாரையும் தந்தனர்.. இந்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கள்ளக்காதல் ஜோடியை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தனர்.. அப்போதுதான் திருப்பூரில் அந்த ஜோடி பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

திருப்பூர் கள்ளக்காதல் ஜோடி

பிறகு வைஷ்ணவி, சூர்யாவை மீட்ட போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணையை மேற்கொண்டனர்.. பிறகு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி முன்னிலையில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.. இதனால் வைஷ்ணவியின் கணவரும் குடும்பத்தினரும், சூர்யாவின் குடும்பத்தினரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தனர்.

சூர்யா, வைஷ்ணவி இருவரையும் கண்டு அவரவர் குடும்பத்தினர் கதறி அழுதனர்.. இனிமேல் இப்படியெல்லாம் செய்ய வேண்டாம், குழந்தைகளுக்காக குடும்பத்துடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சூர்யாவிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டனர்.

அதேபோல வைஷ்ணவியிடமும் 2 குழந்தைகளுக்காக மீண்டும் வந்து வாழவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்கள்.. ஆனால் அப்போதும்கூட, வைஷ்ணவி, சூர்யா இருவருமே தங்கள் குடும்பத்தினரின் கண்ணீருக்கு செவிசாய்க்கவில்லை.. அத்துடன் பஞ்சாயத்து செய்யும் சப்-இன்ஸ்பெக்டரிடம், தன்னுடைய கணவருடன் செல்ல பிடிக்கவில்லை, கள்ளக்காதலன் சூர்யாவுடன் செல்லவே தனக்கு விருப்பம் என்று வைஷ்ணவி கறாராக சொன்னார்.

சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த முடிவு

உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமியும், வைஷ்ணவியை கள்ளக்காதலன் சூர்யாவுடன் சேர்த்து அங்கிருந்து அனுப்பி வைத்துவிட்டார்.. தங்கள் கண் முன்னாடியே கள்ளக்காதல் ஜோடி ஒன்றாக கிளம்பி செல்வதை, வைஷ்ணவியின் கணவரும், சூர்யாவின் மனைவியும் அதிர்ச்சியுடன் பார்த்து நின்றனர்.

பொதுவாக இப்படியொரு சூழ்நிலை வந்தால், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குழந்தைகளுக்காகவும், குடும்பத்தினருக்காகவும், பெண்ணின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், அவரவர் குடும்பத்துடன் சேர்த்து வைப்பது வழக்கமாகும்..

ஆனால், கணவர், குழந்தைகள் இருந்தும், அவருடன் பெண்ணை அனுப்பாமல், கள்ளக்காதலனுடன் சப்-இன்ஸ்பெக்டர் அனுப்பி வைத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. எனவே இது போன்ற குடும்ப நல பிரச்சனைகளில் எவ்வாறு முடிவெடுப்பது? பாதிக்கப்பட்டவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது? என்பது குறித்து போலீசாருக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

திருப்பூர் கள்ள ஜோடி

நாளுக்கு நாள் இந்த கள்ளக்காதல் அட்டகாசங்கள் பெருகி வருகின்றன.. இந்த முறைதவறிய உறவுகளால் குடும்ப வன்முறைகளும் தமிழகத்தில் அதிகமாகி விட்டன.. இதுபோன்ற கள்ளக்காதல் ஜோடிகளால் அவர்களின் குடும்பங்களும் நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன..

இதோ இந்த திருப்பூர் கள்ளக்காதல் ஜோடி விவகாரத்திலும் நிர்க்கதியாய் நிற்கும் வைஷ்ணவியின் 2 குழந்தைகளையும், சூர்யாவின் 2 குழந்தைகளையும் நினைத்தாலே அனைவருக்கும் இதயம் கனத்து விடுகிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+