திருப்பூர் மைதிலி ரூ.2000 க்கு அசிங்கப்பட்டு.. அடங்காத ஆபீசர்களின் பேராசை.. மனை அங்கீகாரம் கேட்டால்?
திருப்பூர்: தமிழகத்தின் வருவாய்த்துறையிலும், பதிவுத்துறையிலும், லஞ்ச லாவண்யங்கள் அதிகரித்து வரும்நிலையில், அதற்கேற்றார்போல் கைது நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கைதாகி வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.. அதிலும், பெண் அதிகாரிகளும் லஞ்சப்புகாரில் கைதாவது பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது. இதோ திருப்பூரில் அரசு ஊழியர் ஒருவர் கைதாகி உள்ளார்..
தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்து வருகின்றனர். அதிலும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கி கைது செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு சொந்தமாக திருப்பூர் மங்கலம் ரோடு ஜான்ஜோதி கார்டன் பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் உள்ளது. அதில் வீடு கட்டுவதற்கு அனுமதி வாங்குவதற்காக திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்..
மாநகராட்சி ஊழியர்
விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட மாநகராட்சி தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கம் (வயது 35) அனுமதி வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், லஞ்சம் தரமறுத்த கிருஷ்ணமூர்த்தி, இதுகுறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சொன்னபடி, ரசாயனம் தடவிய பணத்தை, மாவட்ட மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த நாகலிங்கத்திடம் தந்தார்.. அதனை வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகலிங்கத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ஆனால், இவர் மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறாராம்.. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
2 ஆயிரத்துக்கு அசிங்கப்பட்ட மைதிலி
சில மாதங்களுக்கு முன்பு, திருப்பூரில் வருவாய் ஆய்வாளராக இருந்த மைதிலி என்ற அதிகாரி இதுபோலவே லஞ்சம் வாங்கி கைதாகியிருந்தார்.. அதாவது ஜீவா என்பவர், வாரிசு சான்றிதழ் கேட்டு, திருப்பூர் தெற்கு தாலுகா, நல்லூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்..
இதற்காக நல்லூர் வருவாய் ஆய்வாளரான மைதிலி என்பவரிடமும் அணுகியபோது, வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமானால், 2,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் மைதிலி.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவா, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யவும், சுற்றிவளைத்து மைதிலி கைது செய்யப்பட்டார்.
மைதிலியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட வருவாய் அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டார் என்றாலும், ஒரு பொறுப்பு மிக்க உயர்பதவியில் இருந்துகொண்டு, வெறும் 2 ஆயிரம் வாங்கி பொதுவெளியில் அசிங்கப்பட்டிருந்தார் 43 வயது பெண் அதிகாரி மைதிலி.
மின் இணைப்புக்கு லஞ்சம்
4 நாட்களுக்கு முன்புகூட, திருப்பூரில் மின்வாரிய பொறியாளர் ஒருவர் கைதாகியிருக்கிறார்.. காங்கேயம், மருதுரையான் வலசு அருகேயுள்ள மீனாட்சி வலசைச் சேர்ந்தவர் சாமிநாதன் என்ற விவசாயி, கடைகளுக்கு வணிக மின் இணைப்பு கேட்டு, படியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின் இணைப்பு வழங்க, மின்வாரிய உதவி பொறியாளர் வெங்கடேஷ், 45, என்பவர், 10,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். கடைசியில் உதவிப்பொறியாளர் வெங்கடேஷ், போர்மேன் நந்தகோபால் இருவருமே கைதானார்கள்.
இன்று மனை அங்கீகாரத்துக்கு ரூ.6,000 லஞ்சம் வாங்கிய நகர் ஊரமைப்பு பிரிவின் தொழில்நுட்ப உதவியாளர் நாகலிங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளார்கள்.. இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பொதுமக்களை கவலையையும், அதிருப்தியையும் தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications