திருப்பூர் போலீஸ்காரர் கொடூர கொலை.. அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் விளக்கம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். குடிமங்கலம் சிக்கனூத்து பகுதியில் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் பணியாற்றி வரும் தந்தை, மகன்களிடையே பிரச்னை என்று தகவல் வந்துள்ளது. அதுதொடர்பாக விசாரிக்க சென்ற சண்முகவேல் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடந்சந்தூரைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு தங்கபாண்டியன், மணிகண்டன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பணியாற்றி வருகிறார்கள். அந்த தோட்டம் மடத்துகுளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமானதாகும். மகேந்திரன் திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.

விசாரிக்க சென்ற போலீஸ் கொலை
கடந்த 2014-19 ஆம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரின் தோட்டத்தில் பணியாற்றி வந்த மூர்த்தி மற்றும் மகன்கள் மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் பிரச்னை தீவிரமடைந்து ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு எண்ணான 100க்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முகவேல் (52) விசாரிக்க சென்றுள்ளார். அப்போது தந்தை, மகன்கள் மோதிக் கொண்டிருந்துள்ளனர். சண்முகவேல் அதை தடுத்து சமாதானம் செய்ய முயற்சித்தார். இருப்பினும் அவர்கள் சண்முகவேலின் பேச்சை கேட்கவில்லை. ஒருகட்டத்தில் அவர்கள் சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
5 தனிப்படைகள்
இதில் சண்முகவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பணியில் இருந்த காவலரை சீருடையுடன் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சிட்டிங் எம்எல்ஏவின் தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகியுள்ள மூர்த்தி மற்றும் மகன்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில், கோவை சரக டிஐஜி சசிமோகன் ஆகியோர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனும் தனது தோட்டத்திற்கு சென்று காவல்துறையிடம் பேசினார். சம்பந்தப்பட்ட 3 பேரும் எப்போதிருந்து அங்கு பணியாற்றுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன, அங்கு என்ன மாதிரியான பிரச்னை நிகழ்ந்தது என்று காவல்துறையினர் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
எம்எல்ஏ விளக்கம்
அதற்கான பதில்களை தெரிவித்த மகேந்திரன், "ஆனால் இந்த கொலை சம்பவத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும்." என்றும் அவர் கூறியுள்ளார். காவல்துறையினர் தொடர்ந்து மகேந்திரனின் தோட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications