திருப்பூரில் வாடகை வீட்டில் யாரிது? தோட்டத்தில் அசிங்கமாக பிடிபட்ட நபர்.. அரிசி கார்டுதாரர்கள் உஷார்
திருப்பூர்: தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான தீவிர நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வந்த போதிலும், கடத்தல்கள் குறையவில்லை.. நேற்று ஒரே நாளில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடத்தல்களும், கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளன..
தமிழகத்திலேயே, தேனி மாவட்டத்தின் எல்லை பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி மற்றும் போடி மெட்டு வழியாக அண்டை மாநிலங்களுக்கு நாள்தோறும் அரிசி கடத்தப்படுவது ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது.

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்காக விலையில்லாமல் வழங்கும் இந்த அரிசியை, ஒரு சில கும்பல் லாப நோக்கில் வெளிச்சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இத்தகைய கடத்தல் பேர்வழிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும், அவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
அரிசி கடத்தலை தடுக்க காவல்துறை சார்பில் புகார் எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடத்தல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.. ஈரோடு மாவட்டம் சிவகிரி ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையிலான குழுவினர் அங்கு அதிரடிச் சோதனை நடத்தினர்.
தோட்டத்தில் அசிங்கம்
அப்போது தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் மீட்டனர். மேலும் அந்த ரைஸ் மில் அருகே நின்றிருந்த ஈச்சர் வேனை சோதனையிட்டபோது, அதில் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 10,000 கிலோ ரேஷன் அரிசி கண்டறியப்பட்டது.
மொத்தம் 12 ஆயிரம் கிலோ அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ரைஸ் மில் உரிமையாளர் ராமலிங்கம், மேலாளர் குழந்தைவேல் மற்றும் தாம்சன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் ரேஷன் அரிசியை வாங்கி, அதை பாலிஷ் செய்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்று வருவதாக போலீசாரிடம் வாக்குமூலம் தந்துள்ளார்கள்..
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் மிகப்பெரிய அளவில் ரேஷன் அரிசி கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மங்கலம் ரோடு குளத்துப்புதூர் பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் அரிசி பதுக்கப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
தோட்டத்தில் பதுக்கிய ரேசன் பொருட்கள்
போலீசார் அந்த வாடகை வீட்டை மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.. அப்போதுதான், தங்கபால் என்பவர் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி, இந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. சுமார் 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து, அதை அவிநாசி மற்றும் புதிய திருப்பூர் பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்குக் கூடுதல் விலைக்கு அவர் விற்பனை செய்து வந்ததும் அம்பலமானது..
அதாவது கருவம்பாளையம், பாரப்பாளையம், இடுவம்பாளையம், கோழிபண்ணை மற்றும் குளத்துப்பாளையத்தில் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி அதை மொபட்டில் கடத்தி வந்து வாடகை வீட்டில் பதுக்கி கூடுதல் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
வாடகை வீட்டில் பதுக்கல்
இதையடுத்து தங்கபாலை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 டன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு வேன் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
தமிழக அரசு வழங்கும் இலவச அரிசி தகுதியுள்ள ஏழை மக்களுக்குச் சென்றடையாமல், இடைத்தரகர்கள் மூலம் இவ்வாறு கடத்தப்படுவது நிர்வாக ரீதியிலான சவாலாக உருவெடுத்துள்ளது.
அதிலும் எல்லைப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு இருந்தாலும், நூதன முறையில் அரிசியை பாலீஸ் செய்து விற்பனை செய்யும் கும்பல்கள் அதிகரித்துள்ளன. கடத்தலில் ஈடுபடுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே இத்தகைய குற்றங்களைத் தடுக்க முடியும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.
ஈரோடு மற்றும் திருப்பூரில் பிடிபட்ட இந்த 17 டன் அரிசி கடத்தல் சம்பவம், ரேஷன் அரிசி விநியோகத்தில் உள்ள ஓட்டைகளை சரிசெய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. அரசு இயந்திரம் இன்னும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கடத்தல் கும்பலின் வேர்களைக் கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்....!!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications