திருப்பூர் ரிதன்யா காரில் விஷம் குடித்து.. வரதட்சணைக்கு ஒரு ஆதாரம்.. விசாரணைக்குழு முன் பெற்றோர் ஆஜர்
திருப்பூர்: ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. நீதிமன்றத்திலும் இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.. தன்னுடைய மகளின் மரண வழக்கை பாலியல் துன்புறுத்தல் பிரிவிலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாரிடம், ரிதன்யாவின் அப்பா சமீபத்தில் புகார் தந்திருந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.. இந்த புகாரின்பேரில் சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது... இதன் விசாரணையும் நேற்றைய தினம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யா, வரதட்சணை கொடுமையால், திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்..

கடந்த மே 28ம் தேதி தன்னுடைய காரிலேயே விஷம் குடித்து உயிரை விட்டார் ரிதன்யா.. தற்கொலைக்கு கணவர் மற்றும் அவரது பெற்றோர்தான் காரணம் என்று கூறி, வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் வெளியிட்டிருந்தார்.. இந்த ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணியது..
ரிதன்யா மரணம் தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர்.
மகளிர் ஆணையம்
இதையடுத்து, ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலர் ரஞ்சிதாதேவி தலைமையிலான குழுவினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் நேற்று வந்திருந்தனர்.. அங்கு தங்களது விசாரணையையும் தொடங்கினர். இக்குழுவினரின் முன்பு ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை, அம்மா ஜெயசுதா, சகோதரர் மிதுன், மற்றும் உறவினர்கள் என அனைவருமே ஆஜரானார்கள்.
அப்போது ரிதன்யாவின் தற்கொலை, வரதட்சணை கொடுமை தொடர்பாக உள்ள ஆதாரங்களுடன் நாளை அதாவது வியாழக்கிழமையன்று ஆஜராகுங்கள், வரதட்சணை கொடுமை தொடர்பாக உங்களிடம் உள்ள ஆதாரங்களையும் அப்போது வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
ஆதாரங்கள் எங்கே
இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ரஞ்சிதா தேவி சொல்லும்போது, "தற்கொலை சம்பவம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் சம்மன் வழங்கப்பட்டது. ரிதன்யாவின் பெற்றோர் ஆஜராகி சில ஆடியோ உள்ளிட்ட தகவல்களை வழங்கினார்கள்.. ஆனால் ,கவின்குமார் குடும்பத்தினர் ஆஜராகவில்லை. எனவே அவர்கள் ஆஜராகும்படி மறுபடியும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தரப்பினரிடமும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதைத்தொடர்ந்து ரிதன்யாவின் பெற்றோர், அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.. எனவே, அனைத்து ஆதாரங்களையும் நாளைய தினம் ரிதன்யாவின் பெற்றோர் நாளைய தினம் ஆஜராகி சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே ஒரு ஆதாரம் போதும்
சமீபத்தில் முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. "என்னிடம் எப்ஐஆரை படித்து காட்டினார்கள். அந்த பாப்பா பேசியிருந்த ஆடியோ மிக முக்கியமானது. இனி இதில் எதுவும் ஏமாற்ற முடியாது. எந்த கொம்பன் வந்தாலும் அந்த ஆதாரத்தை உடைக்க முடியாது. டிபன்ஸ் லாயர் வந்தாலும் அதை உடைக்க முடியாது.
மன ரீதியான டார்ச்சர் தந்தது யார்? உடல் ரீதியான டார்ச்சர் தந்தது யார்? என்பதை எல்லாம் தெளிவாக பேசியிருக்கிறார்.. இந்த ஆதாரத்தை போனிலிருந்தே எடுத்து கோர்ட்டில் தந்துவிட்டனர்.. எனவே, அங்கிருந்து லேபிற்கு சென்றுள்ளது.. அதை வைத்தே முடிவை கண்டுபிடிக்கலாம். இந்த ஒரேயொரு ஆதாரம் மட்டுமே போதும். அதை வைத்தே தீர்ப்பை வழங்க முடியும். தண்டனையையும் தர முடியும்.
ஆர்டிஓ விசாரணையுடன், டெக்னிக்கல் சோதனை ரிப்போர்ட்களும் கிடைத்தால் எல்லாம் மாறிவிடும்.. இதில் எஸ்பி இறங்கி விசாரித்தால், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் ஆதரவாக இருக்கும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
