திகைத்து நின்ற திருப்பூர்! பைக்கில் புகுந்த கொம்பேறி மூக்கன்.. உஷார் மக்களே!

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மழைக்காலம் தொடங்கிவிட்டதால், பாம்புகள் கதகதப்பான இடங்களை தேடி அங்கு பதுங்கிக்கொள்கின்றன. அப்படித்தான் திருப்பூரில் பைக் ஒன்றில் கொம்பேறி மூக்கன் பாம்பு பதுங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 58,000 பேர் பாம்பு கடித்து உயிரிழக்கிறார்கள். உலகம் முழுவதும் பாம்பு கடியால் நிகழும் மரணங்களில் பாதி இந்தியாவில்தான் நடக்கிறது. நல்ல பாம்பு மற்றும் கண்ணாடி வரியன் பாம்புகள் கடித்துதான் அதிகமானோர் உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பாம்புகள் குறித்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள். இருப்பினும், பாம்பு-மனித மோதலை தடுக்க முடிவதில்லை.

snake bike

கொம்பேறி மூக்கன்

திருப்பூரில் நேற்று இதேபோல பாம்பு-மனிதன் மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. அதாவது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு மனோஜ் என்பவர் புகார் அளிக்க வந்திருந்தார். தனது பைக்கை காவல் நிலையத்திற்கு வெளியே பார்க் செய்துவிட்டு உள்ளே சென்று புகார் அளித்துவிட்டு, வந்து பார்த்தபோது பைக்குக்குள் கொம்பேறி மூக்கன் பாம்பு ஒன்று நுழைவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து காவல் துறையினரின் உதவியுடன் பாம்பை பிடிக்க முயன்றார். ஆனால் பாம்பு சிறியதாக இருப்பதால் பைக்குக்குள் சென்று விட்டது. எனவே பைக்கின் ஒவ்வொரு பாகமாக கழற்றி பின்னர் பாம்பு பத்திரமாக மீட்டெடுக்கப்பட்டது.

குளிர் ரத்த பிராணிகள்

குளிர் காலம், பருவமழை காலம் தொடங்கிவிட்டதால் பாம்புகள் சூடான, கதகதப்பான இடத்தை தேடி படையெடுக்கும். பாம்புகள் குளிர் ரத்த பிராணிகள். அவை தங்கள் உடலை சரியான வெப்பநிலையில் பராமரிக்க சூடான இடங்களை தேடி செல்லும். பைக்கின் எஞ்சின் சூடாக இருக்கும் என்பதால், அதற்குள் பாம்பு புகுந்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். நல்வாய்ப்பாக கொம்பேறி மூக்கன், விஷம் இல்லாத பாம்பு என்பதால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

ஆபத்தான பாம்புகள்

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நல்ல பாம்பு, கண்ணாடி வரியன், கட்டு வரியன் மற்றும் சுருட்டை வரியன் இந்த நான்கு பாம்புகள்தான் விஷம் கொண்டவையாக அறியப்படுகின்றன. இவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு மிக அருகில் இருப்பதால், இந்த பாம்புகள் கடித்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.

இதில் கண்ணாடி வரியன் மற்றும் கட்டு வரியன் பாம்புகள் மிக மோசமானது. சாலையிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் எந்த பதற்றமும் இல்லாமல் கண்ணாடி வரியன் படுத்திருக்கும். ஆபத்து என்று தெரிந்தவுடன் சில அடி தூரம் வரை பாய்ந்து கடிக்கும். இதனால்தான் இந்த வகை பாம்புகள் ஆபத்தானவையாக பார்க்கப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

கட்டு வரியனை பொருத்தவரை இந்த பாம்புகள் பெரும்பாலும் இரவில் தான் நடமாடும். உறக்கத்தில் இருக்கும்போது இது கடித்தால், நம்மால் பூச்சி கடிக்கும் இந்த பாம்பு கடிக்கும் பெரியதாக வித்தியாசம் காண முடியாமல் போகலாம். இது கடித்ததற்கான தடயமே இருக்காது என்பதால் பாம்பு கடிதான் என்பதை உறுதி செய்யவே நேரம் ஆகிவிடும். அதன் பின்னர் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் செல்லும் போது இன்னும் நேரமாகி விட்டிருக்கும் என்பதால் சிகிச்சை பலனளிக்காமல் கடிபட்டவர் உயிரிழந்து விடுவார்.

எனவே வீட்டில் எலிகள் சேராமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். எலி, தவளை ஆகியவற்றை தேடிதான் இந்த பாம்புகள் வீட்டிற்குள் வருகின்றன. அதேபோல பாம்புகளை அடித்து கொல்வதும் சட்டப்படி குற்றம். பாம்புகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தால், அவற்றை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். நாமாக அதை பிடிக்க முயற்சிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+