திருப்பூரில் தாலிக்கு தங்கம் திட்டம்.. 5 ஆண்டில் 1 பவுன் வீதம் 26 கிலோ! பயனாளிகளுக்கு பொன்னான சான்ஸ்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.. பெண்களுக்காகவே பல நலத்திட்டங்களை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெறாத கல்லூரி மாணவியர்களையும் உள்ளடக்கி, அனைத்து ஏழை பெண்களும் பயன் பெறும் வகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்ட பணிகள் திருப்பூரிலும் வேகம் எடுத்துள்ளன.
தமிழகத்தில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களின் திருமணச் செலவுச் சுமையை குறைக்கும் நோக்கில், தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதையும், அவர்களுக்கு திருமண காலத்தில் பொருளாதார பாதுகாப்பை வழங்குவதையும் இலக்காக கொண்ட இந்தத் திட்டம், பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு துணையாக இருந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மணமகளுக்கு ரூ.25,000 ரொக்க நிதியுதவியும், எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை
அதேபோல், பட்டப்படிப்பு முடித்த மணமகளுக்கு ரூ.50,000 ரொக்க உதவியுடன், எட்டு கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. கல்வித் தகுதியின் அடிப்படையில் உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பது, பெண்கள் கல்வியை தொடர ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனுடன், விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கான திருமண உதவித் திட்டங்களும் தொடர்ச்சியாக நடைமுறையில் இருந்து வருகின்றன.
திருப்பூர் - தாலிக்கு தங்கம் திட்டம்
நேற்றைய தினம் திருப்பூர் மாவட்டத்தில் 2025–26ம் ஆண்டுக்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கமும் வழங்கப்பட்டன.இந்த மாவட்டத்தில் 74 பயனாளிகளுக்கு தலா எட்டு கிராம் வீதம், மொத்தம் 74 பவுன் தங்கம் வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்–2 படித்த பெண்களுக்கு தலா ரூ.25,000 எனவும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தலா ரூ.50,000 எனவும், மொத்தமாக ரூ.32.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி பயனாளி பெண்களுக்கு தங்க நாணயங்களையும் நிதியுதவியையும் வழங்கினர். மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவி வரவேற்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பேசும்போது, “திருப்பூர் மாவட்டத்தில் 2021 முதல் 2025 வரை ஐந்து ஆண்டுகளில், 3,317 பயனாளிகளுக்கு தலா ஒரு பவுன் வீதம், மொத்தம் 26.536 கிலோ தங்கமும், ரூ.14 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
தங்கம் - தங்க நாணயம்
சமீப காலமாகவே சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளின் காரணமாக, தமிழகத்தில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து, சவரன் விலை லட்சம் ரூபாயை நெருங்கி வருகிறது.
இதனால், திருமண வயதில் மகள்களை வைத்திருக்கும் ஏழை குடும்பங்கள் கடும் மன அழுத்தத்துக்கும் பொருளாதார சிரமத்துக்கும் ஆளாகி வருகின்றன.
பெண்களுக்கு மகிழ்ச்சி
இத்தகைய சூழலில், அரசின் இந்தத் திருமண உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் எட்டு கிராம் தங்கமும், நிதியுதவியும், பெண்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்து வருகிறது.
அதுமட்டுமல்ல, விரைவில் தேர்தல் வரப்போகிறது.. எனவே பெண்களை மையமாகக் கொண்டு பல நலத்திட்டங்களை தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, மாதம் ரூ.1,000 உதவித் தொகை பெறாத கல்லூரி மாணவியர்களையும் உள்ளடக்கி, அனைத்து ஏழை பெண்களும் பயன் பெறும் வகையில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்?












Click it and Unblock the Notifications