திருப்பூரில் காதலை ஏற்கும்படி கெஞ்சி கேட்ட இளைஞர்.. விடாமல் மறுத்த பெண்.. மறு நொடியே ஆடிப்போன உடுமலை
திருப்பூர்: ஆசை ஆசையாக காதலித்த பெண், தன்னை காதலிக்க மறுத்ததை இளைஞரால் ஜீரணிக்க முடியவில்லை.. கடைசியில், ஒரு தற்கொலையில் காதல் முடிந்துள்ளது.. திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. சத்யா காலனி பகுதியில் குடியிருந்து வந்த பிரியாவுக்கும், தீபக் என்ற இளைஞருக்கும், இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது..

நட்பு: பிரியாவுக்கு 23 வயதாகிறது.. தீபக்குக்கு 19 வயதாகிறது.. நாளடைவில் இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.. இதனால், தொடர்ந்து பல நாட்களாகவே இருவரும் சகஜமாக பழகி வந்துள்ளனர்..
ஒருகட்டத்தில், திருப்பூரில் உள்ள பிரியாவின் வீட்டிற்கு தீபக் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.. ஒருமுறை பிரியா வீட்டிற்கு தீபக் சென்றபோது, தன்னுடைய காதலை சொல்லி உள்ளார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பிரியா, தீபக்கின் காதலை ஏற்கமுடியாது என்று சொல்லிவிட்டார். இதனால், தீபக்குக்கும், பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது...
சரியான சந்தர்ப்பம்: இந்நிலையில், இன்றைய தினமும் பிரியா வீட்டிற்கு தீபக் சென்றுள்ளார்.. அப்போது, பிரியா வீட்டில் யாரும் இல்லை என்று தெரிகிறது.. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த தீபக், மீண்டும் தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளுமாறு சொல்லி உள்ளார்.. அப்போதும் காதலை ஏற்பதில்லை என்பதில் பிரியா உறுதியாக இருந்தார்.
இதனால் ஆவேசம் அடைந்த தீபக், தான் கையோடு கொண்டு சென்றிருந்த பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து, பிரியாவின் கழுத்தை அறுத்தார்.. மொத்தம் 3 இடங்களில் பிரியாவை ஆத்திரத்துடன் வெட்டினார்.. இதில் பிரியா ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.. இதைப்பார்த்த தீபக், வீட்டின் ரூமில் இருந்த ஃபேனில் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தீவிர சிகிச்சை: இதையடுத்து, திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் பறந்தது.. விரைந்து வந்த போலீசார் தீபக்கின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. படுகாயமடைந்த உயிருக்கு போராடி கொண்டிருந்த பிரியாவை, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. தற்போது தீவிர சிகிச்சை பிரியாவுக்கு தரப்பட்டு வருகிறது.. ஒருதலையாய் விழுந்த விழுந்து காதலித்து, இளம்பெண்ணை கழுத்தை அறுத்ததுடன், தானும் தூக்கிய இளைஞரால், திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications