திருப்பூரில் புறம்போக்கு நிலத்தில் புதையல்.. விலை மதிப்பு மிக்க பச்சை கற்கள்.. சுற்றுப்போடும் மக்கள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே பூசாரி வலசு மன்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 4.36 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.இங்கு விலை மதிப்பு மிக்க அரிய வகை தாதுக்கள் இருப்பதாக கூறி சில வருடங்களுக்கு முன்பு மத்திய புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். இந்நிலையில் அங்கு புதையல் இருப்பதாக தகவல்கள் பரவியது. அங்கு தோண்டியவர்களுக்கு மதிப்புமிக்க சிறு சிறு பச்சை கற்கள் கிடைத்தது.. அங்கு புதையலை தேடி ஒரு கும்பல் ஜேசிபியை வைத்தே தோண்டியிருக்கிறது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது பச்சாபாளையம் கிராமம். இந்த வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட பூசாரி வலசு மன்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 4.36 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்கிறது. இந்தபகுதியில் விலை மதிப்பு மிக்க அரிய வகை தாதுக்கள் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு மத்திய புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் தெரியும். இதனால் அந்த இடத்தில் புதையல் இருக்கலாம் என மக்கள் நம்பத் தொடங்கினார்கள்.

கோவில் இருக்கிறது
மக்கள் புதையல் இருப்பதாக நம்பும் பகுதி என்பது, உயரமான மண் கரடு பகுதியாகும். இங்கு ஒரு கோவில் உள்ளது. அந்தப் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியில் படைத்தளம், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு, மற்ற பகுதிகளை கண்காணிக்கும் இடமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு புவியியல் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த ஜி.டி. ஸ்டேஷன் எனப்படும் இந்திய முக்கோணவியல் அளவீட்டுக் கல் இன்றும் இருக்கிறது.
பச்சை கற்கள்
புதையல் இருப்பதாக நம்பிய மக்கள் இந்த பகுதியில் சுற்றிசுற்றி தேடுதல் வேட்டை நடத்தியுள்ளார்கள். அப்படி தேடியவர்களுக்கு, மதிப்புமிக்க சிறு சிறு பச்சை கற்கள் கிடைத்துள்ளது. அதை பலர் விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மண் கரடுப்பகுதியை பொக்லைன் எந்திரம் மூலம் 4 பேர் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மீது சந்தேப்பட்டு பூசாரி வலசு நல்லசாமி என்பவர் பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தார். அங்குசென்று விசாரித்த போது புதையல் இருப்பதால் தோண்டியதாக அவர்கள் கூறினர். விஏஓ விசாரித்த உடன் பொக்லைன் வாகனத்துடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
புதையலை தேடிய 4 பேர் கைது
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் விஏஓ புகார் அளித்தார். இதையடுத்து வெள்ளக்கோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமுத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா புன்னம் சத்திரம் பெருமாள் நகரை சேர்ந்த குமரேசன் (வயது 31), வீரக்குமார் (37), பரமத்தி அண்ணா நகரை சேர்ந்த மூர்த்தி (51) திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா சிங்கார சோலையைச் சேர்ந்த குமரவேல் (35) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் புதையல் உள்ளதாக மக்கள் நம்பும் பகுதியில் பலர் சுற்றுப்போட தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications