‛மாவுக்கட்டு’.. திருப்பூரில் செய்தியாளரை தாக்கிய 2 பேருக்கு நேர்ந்த சோகம்.. காலில் எலும்பு முறிவாம்
திருப்பூர்: திருப்பூர் பல்லடத்தில் தனியார் செய்தியாளர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.
திருப்பூர்: திருப்பூர் பல்லடத்தில் தனியார் செய்தியாளர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தை அறிந்த நேசபிரபு உடனடியாக அவசர எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்திருக்கிறார். பின்னர் காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்திற்கும் போன் செய்து புகார் அளித்திருக்கிறார். ஆனால் காவல் நிலையத்தில் போதுமான காவலர்கள் இல்லாததால், நேரில் வந்து புகார் அளிக்கும்படி மறு முனையில் பேசிய போலீசார் கூறியிருக்கிறார்.
வீட்டிற்கு சென்றால் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த நேசபிரபு மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு சென்றிருக்கிறார். பல்லடத்தில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற அவர், மீண்டும் போலீசுக்கு அழைத்துள்ளார். போலீசாரிடம் காப்பாற்றுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, 5 கார்களில் வந்த மர்ம நபர்கள் நேசபிரபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் நேசபிரபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்திருக்கிறார்.
அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் விடுத்திருந்த அறிக்கையில்,
“திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த, தனியார் தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர், நேச பிரபு நேற்று அடையாளம் தெரியாத சில நபர்களால் தாக்கப்பட்ட செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். ஊடக செய்தியாளர் மீதான இந்த தாக்குதல் நிகழ்ச்சி மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சம்பவம் நடப்பதற்கு முன்பாக செய்தியாளர் நேச பிரபு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க ஆணையிட்டுள்ளேன். மேலும் இதனை ஒரு சிறப்பு நிகழ்வாக கருதி, மருத்துவ சிகிச்சையில் உள்ள நேசப் பிரபுவுக்கு, பத்திரிகையாளர் நல வாரியத்திலிருந்து ரூ 3 லட்சம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை தாக்கியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தடுக்கி விழுந்ததாகவும், எனவே காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கைதானவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications