"பாஜக"தான் காரணம்.. தாராபுரத்தில் விரைவில் ரயில் வழித்தடம்.. மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி
பாஜகவை புகழ்ந்து எல்.முருகன் கோவையில் பேட்டி தந்துள்ளார்
திருப்பூர்: தாராபுரம் மக்களுக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன்... இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் தாராபுரம் வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உறுதி தந்துள்ளார்.
எம்பி தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில் பல்வேறு வியூகங்களை கையில் எடுத்துள்ளது..
துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. உதவிக்கு சென்ற ரஷ்ய விமானம் விபத்து.. 8 பேர் பரிதாப பலி!
அதன்படி, மக்கள் ஆசி யாத்திரையை துவங்கி உள்ளது.. மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் விதமாகவே இந்த யாத்திரை நடக்கிறது.. நேற்று முதல் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 3 நாட்கள் யாத்திரை நடக்க உள்ளது.

பேச்சு
தாராபுரத்தில் இன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரை பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முருகன் பேசியபோது, "தமிழகத்தை இன்னும் அதிகம் வளர்ச்சி பெற வைக்க பணியாற்றுவேன்... 50 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கிய பெருமை பாஜகவையே சேரும்... சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்க வேண்டும்.

திட்டங்கள்
எல்லாருக்கும் மத்திய அரசின் திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பிரதிநிதியாக எனக்கொரு வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கி இருக்கிறார்.. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களை அறிமுகம் செய்ய வைக்க விடாமல் மிகப்பெரிய கூச்சல், குழப்பத்தை ஏற்படுத்தி சபையை நடத்த விடாமல் செய்து விட்டனர்.

மக்கள்
அதனால் இப்போது மக்களாகிய நீங்கள் எங்களை ஆசி செய்யுங்கள் என்று 43 மந்திரிகளும் இந்தியா முழுவதும் மக்களை தேடி இந்த யாத்திரையை தொடங்கியுள்ளோம்... உங்களின் ஆசி, ஆதரவு எங்களுக்கு வேண்டும். புதிய.. அமைச்சர்களில் 8 பேர் மலைவாழ் மக்கள், 12 பேர் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள். 28 பேர் ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள், 12 பேர் பெண்கள்... இவர்களையெல்லாம் அறிமுகப்படுத்த விடாமல் செய்து விட்டனர்.

தாராபுரம்
தாராபுரம் மக்களுக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன்... சட்டசபை தேர்தலில் எனக்கு 88 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர்... இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் தாராபுரம் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்... தாராபுரத்தில் ரயில் வழித்தடம் கொண்டு வர நடவடிக்கையை நிச்சயம் எடுப்பேன்" என்றார்.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications