துருக்கியில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. உதவிக்கு சென்ற ரஷ்ய விமானம் விபத்து.. 8 பேர் பரிதாப பலி!
அன்காரா: துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 5 ரஷ்ய ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இத்தாலி, துருக்கி, கிரீஸ், அல்ஜீரியா உள்ளிட்ட மத்திய தரைக்கடல் நாடுகளில் தற்போது காட்டுத்தீ தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக துருக்கியின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. உலகம் முழுக்க அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை உயரும் என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தடுத்து பேரிடர்கள் ஏற்படும், உலகின் வெப்பநிலை மோசமான நிலையை அடையும், காட்டுத்தீ ஏற்படும், கடல் மட்டம் உயரும், மனிதர்கள் இனி இயற்கை பேரிடர்களுக்கு இடையில்தான் வாழ வேண்டும், என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் குறித்த கவலைகள் இதனால் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. அதிலும் துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

துருக்கி
துருக்கியில் கடந்த இரண்டு வாரமாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். காடுகளில் மட்டுமின்றி மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும் இந்த காட்டுத்தீ மோசமாக பரவி வருகிறது. 400கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. துருக்கியின் தெற்கு பகுதி முழுக்க இந்த காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. மெர்ஸின், ஒஸ்மானியா, அடாணா, அண்டால்யா, பிளேசஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்த காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

எப்படி
இதுவரை 280க்கும் அதிகமான காட்டுத்தீ அணைக்கப்பட்டுள்ளது. பல நூறு தீயணைப்பு வீரர்கள் இங்கே தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இதில் 100 காட்டுத்தீ கொஞ்சம் கூட அணைக்க முடியாத அளவிற்கு மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீ காரணமாக பல இடங்களில் வெப்ப காற்று வீசுவதும் ஏற்பட்டுள்ளது. இதனால் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்து மேலும் காட்டுத்தீ வேகமாக பரவும் ஆபத்தை இது ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பரவல்
தற்போது வரை மீட்பு பணிகளில் 45 ஹெலிகாப்டர்கள் ஈடுப்பட்டு வருகின்றன. அதேபோல் 55 ராணுவ வாகனங்கள் இங்கே களமிறக்கப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் விமானம் உட்பட 10க்கும் அதிகமான விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் 1080 தண்ணீர் வாகனங்கள் அங்கு தண்ணீர் ஊற்றி காட்டுத்தீயை அணைக்க போராடி வருகின்றன. ஆனால் இதுவரை அங்கு தீயை அணைப்பதில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

ரஷ்ய விமானம்
துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க ரஷ்யாவும் உதவி வருகிறது. துருக்கியில் ஏற்படும் காட்டுத்தீ கருங்கடலை பாதிக்க வாய்ப்புள்ளதாலும், வானிலை ரீதியாக இது ரஷ்யாவையும் பாதிக்கும் என்பதாலும் ரஷ்யா இந்த காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக ரஷ்யா துருக்கிக்கு விமானங்களை கொடுத்து உதவி உள்ளது. இந்த நிலையில்தான் துருக்கியில் காட்டுத்தீயை அணைக்க சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது.

விபத்து
தெற்கு துருக்கியில் தீயணைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த விமானம் அனுப்பி வைக்கப்பட்டது. ரஷ்யாவின் Beriev BE-200 வகை விமானம் ஆகும் இது. துருக்கி அரசு அதிகாரிகள் 3 பேர், ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் 5 பேருடன் இந்த Beriev BE-200 விமானம் சென்றுள்ளது. துருக்கியின் அடானா பிராந்தியத்தில் இந்த விமானம் தரையிறங்கும் நொடிக்கு முன் கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த விபத்துக்கு காட்டு தீ காரணமா அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.

காட்டுத்தீ
காட்டுத்தீயால் ஏற்படும் அதீத வெப்பநிலையால் இந்த விமானம் விழுந்து நொறுங்கி இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் அங்கே வேறு விமானங்கள் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதால் இந்த விபத்துக்கு பெரும்பாலும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பகுதிக்கு தற்போது மீட்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே காட்டுத்தீ பரவி வருகிறது.

சிக்னல்
இந்த விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பை இழந்தது. இதன் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவில் அரசும், பல்வேறு தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்களும் பழைய மாடல் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் இப்போதும் கூட பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விபத்து
இதனால் ரஷ்ய விமானங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ரஷ்யாவில் காணாமல் போன ஏஎன் -26 விமானம் கம்சட்கா தீபகற்பம் அருகே இருக்கும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணித்த 28 பேரும் பலியாகிவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. ஆண்டனோவ் 26 என்ற பயணிகள் விமானம் ஆகும் இது. மிகவும் பழைய விமானம் என்பதால் இது விபத்துக்கு உள்ளானது. அதேபோல் இந்த விமானமும் துருக்கியில் மீட்பு பணிகளின் போது விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications