அன்ரிசர்வ் ரயிலில் யார் பாருங்க.. டிக்கெட் எடுத்தும் இப்படியா? திருப்பூர் உட்பட தமிழகமே திணறுதே
திருப்பூர்: முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துவரும் நிலையில், வடமாநில பயணிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை தென்னக ரயில்வேக்கு விடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நெட்வொர்க் ரயில்வே ஆகும்.. ஒருநாளைக்கு லட்சக்கணக்கானோர் ரயிலில் பயணித்து வருகிறார்கள். இதனால், ரயில்வேயின் முக்கியத்துவம் பெருகி கொண்டே வருகிறது. அதனால், பயணிகளுக்காகவே ஏராளமான வசதிகளை ரயில்வே செய்து தருகிறது. ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டும் வருகின்றன.

இதில் நிறைய ரயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. எனினும், ரயில்களில், சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு, ரிசர்வேஷன் செய்திருக்கும் பெட்டிகளில் வடமாநில மக்கள் சிலர் பயணிப்பதாக புகார்கள் கிளம்பி வருகின்றன. சென்னையிலும், இப்படி முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள், பயணிப்பது மிகப்பெரிய பிரச்சினையாகவும் வெடித்துள்ளது.
ஏசி கோச்கள்: மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில், ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில், வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறார்களாம்.. சிலசமயம், ஏசி கோச், ஸ்லீப்பர் கோச்களிலும் ஏறிவிடுகிறார்களாம். இதனால் ரிசர்வ் செய்தவர்கள், சீட் இல்லாமல் அவதிக்கு ஆளாகிவிவருவதால், ரயிலில் சிலசமயம் ஏறுவதற்குகூட முடிவதில்லை என்று பயணிகள் நொந்து சொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், தீபாவளி நெருங்கிவிட்டதால், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தங்கியிருக்கும், குஜராத் , பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு கிளம்பி செல்கிறார்கள்.
கூட்ட நெரிசல்: நாளை மறுதினம் தீபாவளி என்பதால், திருப்பூரில் பல்வேறு நிறுவனங்களுக்கு போனஸ் தொகை + விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த மாநிலத்தை நோக்கி கிளம்ப துவங்கியிருக்கிறார்கள்.
இதனால், ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிலும், திருப்பூர் ரயில் நிலையத்தில் 2 நிமிடம் மட்டுமே ரயில் நின்று செல்வதால் ஒரே நேரத்தில் பயணிகள் ஏறியதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது..
கோரிக்கை: எனவே, திருப்பூரில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கோவையிலேயே அதிக பயணிகள் ஏறிவிடுகிறார்களாம். இதனால், வடமாநில தொழிலாளர்கள் திருப்பூரில் ஏறும்போது நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலைமை உள்ளதாக வருத்தத்துடன் சொல்கிறார்கள்.. எனவே, வட மாநிலங்களுக்கு செல்லும் ரயிலில் ரிசர்வ் செய்யப்படாத பெட்டிகளை அதிகளவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிலசமயம் ரயிலின் அவசர வழிகள் வழியாகவும் ஏற வண்டியிருக்கிறதாம்.. அதுமட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளுடன், ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாகவும், தங்களின் தீபாவளி பண்டிகை முக்கியத்துவத்தை உணர்ந்தும், உடனடியாக கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்றும், முக்கியமாக தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கூடுதல் பெட்டிகளை இணைத்தால், இந்த நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்கும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications