தாராபுரம் மேம்பாலத்தின் அடியில் கிடந்த சாக்கு மூட்டை.. திறந்தால் பயங்கரம்! அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காய்கறி வியாபாரியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசிவிட்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் ஊரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி தண்டபாணி வயது 35 இவரது மனைவி தேவி வயது 33 ஆகியோர் வசித்து வந்தனர்.

 Vegetable trader killed in dharapuram, Tirupur district

இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது இந்த நிலையில் கடந்த 17 நாட்களாக தண்டபாணியை காணவில்லை என உறவினர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை புதிய மேம்பாலம் அருகே கிணற்றில் சாக்குமூட்டையில் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக தாராபுரம் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீயணைப்பு நிலை அலுவலர் ஜெயச்சந்திரன் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டெடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கொலைச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததுடன், கொலை எதற்காக செய்யப்பட்டது. கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+