நடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவி ராஜினாமாவா? வெள்ளகோவில் சாமிநாதன் விளக்கம்
திருப்பூர்: நடிகர் உதயநிதிக்காக திமுக இளைஞர் அணி செயலாளர் பதவியை தாம் ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகள் வதந்தி என்று வெள்ளகோவில் சாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். லோக்சபா தேர்தல் முடிவடைந்த உடன், திமுகவின் சில மாவட்டங்களில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார், கருணாநிதியின் நினைவிடத்தில் இந்த கோரிக்கையை வைக்கப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும் திமுக இளைஞர் அணி செயலாளராக இருக்கும் வெள்ளகோவில் சாமிநாதன் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
அதேநேரத்தில் திமுக ஆதரவாளர்கள் பலரும், இந்த வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தனர். இப்போதே நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சிப் பதவி கொடுப்பது அதிருப்திகளைத்தான் உருவாக்கும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
இதனால் உதயநிதியை திமுக இளைஞர் அணி செயலாளராக்கும் முயற்சிகள் திடீரென ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பூரில் நேற்று குடிநீர் பிரச்சனையை தீர்க்க கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வெள்ளகோவில் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளைஞரணி செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்யவில்லை. என்னை அப்பதவியில் நியமித்தது மு.க.ஸ்டாலின். அவர் நினைத்தால் என்னை மாற்றலாம். இதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என்றார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications