திருப்பூர் அருகே ஆசிரியை மாலதி.. கல்யாண மண்டபம் அருகே.. நடுரோட்டில் நம்பவே முடியாத சம்பவம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட சங்கிலி நாடார் வீதியில் வசித்து வந்த மாலதி என்பவர் உடுமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். ஆசிரியை மாலதி நேற்று உடுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது நடந்த போது பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சங்கிலி நாடார் வீதியில் 25 வயதாகும் மாலதி என்பவர் வசித்து வருகிறார். இவர் உடுமலை அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆசிரியை மாலதியின் உறவினர் வீட்டு திருமணம் நடந்தது.அந்த நிகழ்ச்சியில் ஆசிரியை மாலதி கலந்து கொண்டார். பின்னர் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்த மாலதி, அங்கிருந்து புறப்பட்டு உடுமலைப்பேட்டை நகரில் உள்ள அமணலிங்க நாடார் வீதி வழியாக வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத அந்த சம்பவம், அடுத்த சில நிமிடங்களில் நடந்தது. சாலையில் திடீரென ஆசிரியை மாலதி ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் சில நிமிடத்தில் சாலையில் ஆசிரியை மயங்கி விழுந்தார். மாலதி மயங்கி விழுந்ததை கேள்விப்பட்ட அவருடைய உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆசிரியை மாலதி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பலியான ஆசிரியை மாலதிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்திருக்கிறார்கள்.
அவருக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும் ஏற்பாடுகளையும் பெற்றோர் செய்து வந்தனர். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அவர் எப்படி இறந்தார் என்பது தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே ஆசிரியை மாலதியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும். இதனிடையே ஆசிரியை மாலதிக்கு நடுரோட்டில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications