பூங்காவுக்கு காதலர்களுடன் வரும் பெண்களை வசியம் செய்து பாலியல் தொழில் செய்தாரா ஜோசியர்? பரபர பின்னணி!
திருப்பூர்: திருப்பூரில் பட்டப்பகலில் கிளி ஜோசியர் ஒருவர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளி வீசிய துண்டுபிரசுரத்தில் பரபரப்பு தகவல்கள் காணப்பட்டன.
திருப்பூரை அடுத்த மங்கலம் பாரதிபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (40). இவர் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா முன்பு அமர்ந்து கிளியை வைத்து ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று காலையில் வழக்கம் போல அங்கு வந்து ஜோதிடம் பார்க்கும் பணியில் ரமேஷ் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
பணிகளை முடித்துவிட்டு மதிய உணவுக்காக பென்னிகாம்பவுண்ட் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடியே வந்த ஒரு நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு ரமேஷை வெறியோடு வெட்டி சாய்த்தார்.

கொலையாளி
இதையடுத்து வண்டியின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களை அங்கு கூடியிருந்தவர்களிடம் கொடுத்து விட்டு தப்பி சென்றுவிட்டார். அவர் வீசிய துண்டுபிரசுரத்தில் பரபரப்பு தகவல்களை கொலையாளி கூறியுள்ளார்.

தீயசக்தி
அந்த பிரசுரத்தில் "திருப்பூர் குமரன் பார்க் ரோட்டில் கிளி ஜோதிடம் செய்வது என்ன? இவன் திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவன். பெயர் ஜே.ரமேஷ் என்கிற குமார். இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு வெளியில் அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்ணி வைத்து, தீயசக்தி சாத்தானை வைத்து, பிடித்து பாலியல் தொழில் நடத்தி வருகிறான்.

மகன்
இவனுக்கு பின்னால் சில அரசியல்வாதிகள், சில முக்கிய பிரமுகர்கள், சில போலீஸ் அதிகாரிகள், சில நிறுவன முதலாளிகள் மற்றும் அதன் கும்பலை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர். எனக்கும் போயம்பாளையம் ராஜாநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 9 வருடங்களாக பழக்கம் இருந்து வந்தது. எங்கள் இருவருக்கும் பிறந்த ஒரு மகன் உள்ளான்.

கண்டுப்பிடிக்க நடவடிக்கை
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து அவளை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச்சென்று விட்டான். கடந்த 2 வருடம் 7 மாதங்களாக ரமேஷின் பிடியில் அவள் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறாள். இதனால் அந்த பெண்ணை மீட்டு, கூட்டிச்சென்றவர்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவன்
இந்த விஷயத்தில் முறையான விசாரணை செய்து கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகளை பாலியல் தொழில் செய்ததை கண்டுபிடித்தது போல இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
இப்படிக்கு: இவனால் பாதிக்கப்பட்டவன்".

மனைவி, மகள், மகன்
இவ்வாறு அந்த துண்டுபிரசுரத்தில் கூறப்பட்டிருந்தது. கொலை செய்யப்பட்ட கிளி ஜோதிடர் ரமேசுக்கு திருமணமாகி, மகாலட்சுமி (32) என்ற மனைவியும், தாரணி (11) என்ற மகளும், காளஸ்வரன் (9) என்ற மகனும் உள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications