திருப்பூரில் இப்படி ஒரு பெண்ணா? முதலிரவில் குண்டை தூக்கி போட்ட மனைவி.. மாப்ளை தலையில் விழுந்த "இடி"
திருப்பூர்: ஒரு இளம் தம்பதியினரை போலீசார் வலை வீசி தேடி கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது திருப்பூரில்? யாரிந்த ஜோடி?
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்.. 29 வயதாகிறது.. இவர் காற்றாலை மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.. ஒரு குழந்தையும் இருக்கிறது.

மனைவி: ராதாகிருஷ்ணன் தினமும் குடிப்பாராம்.. இந்த மதுப்பழக்கம் காரணமாக, குடும்பத்தில் பலமுறை தகராறு வந்துள்ளது.. ஒருகட்டத்தில் ராதாகிருஷ்ணனைவிட்டு, அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.
எனவே, ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக தஙகளுக்கு தெரிந்த புரோக்கர்களிடம் சொல்லி, பெண் பார்த்து வந்தனர். அப்போது கேரள மாநிலம் கொழிஞ்சம்பாறை பகுதியை சேர்ந்த புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார்... கேரளாவில் ஒரு பெண் இருப்பதாக சொல்லி, அந்த பெண்ணின் போட்டோவையும் ராதாகிருஷ்ணனிடம் காண்பித்திருக்கிறார் புரோக்கர்.
திருமண செலவு: அந்த பெண்ணை போட்டோவில் பார்த்ததுமே ராதாகிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்து விட்டது. எனவே, உடனடியாக நிச்சயதார்த்தமும் நடந்தது.. அதைத்தொடர்ந்து திருமண நாளும் குறிக்கப்பட்டது.. ஆனால், பெண் வீட்டில் அந்த அளவுக்கு வசதி இல்லை என்பதால், அப்போது பெண் வீட்டில் வசதி இல்லாததால் கல்யாண செலவையும் ராதாகிருஷ்ணனையே ஏற்க சொல்லி உள்ளார் புரோக்கர்.
மணப்பெண்ணை மிகவும் பிடித்துவிட்டதால், ராதாகிருஷ்ணன் இதற்கு ஒப்புக் கொண்டார். எனவே, அந்த பெண்ணுக்கு ஒன்றரை பவுனில் நகை வாங்கி போட்டார்.. புரோக்கருக்கும் ரூ.80 ஆயிரம் கமிஷன் தந்திருக்கிறார். இறுதியில் உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோவிலில் இந்த திருமணம் தடபுடலாக நடந்து முடிந்தது.
தாராபுரம்: திருமணம் முடிந்த கையோடு தம்பதி இருவரும் தாராபுரத்திற்கு வந்தனர்.. அங்கு அவர்களுக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள செய்யப்பட்டிருந்தன.. ஆனால், முதலிரவின்போது "தனக்கு மாதவிடாய் என்றும், மற்றொரு நாள் முதலிரவை வைத்து கொள்வோம்" என்றும் மணப்பெண் முதலிரவை தவிர்த்திருக்கிறார்.
மறுநாள் தன்னுடைய அம்மா உடல்நலம் சரியில்லாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவரை பார்க்க வேண்டும் என்று சொல்லி உள்ளார். எனவே, ராதாகிருஷ்ணனும், புதுமனைவியை பொள்ளாச்சிக்கு அழைத்துச்சென்றுள்ளார்... பொள்ளாச்சிக்கு போனதுமே, அந்த புதுமனைவியை காணவில்லையாம்.. எங்கேயோ திடீரென மாயமாகிவிட்டதாக தெரிகிறது.
ராதாகிருஷ்ணன்: அம்மாவை பார்க்க போன மனைவியை காணாமல் ராதாகிருஷ்ணன் தவித்து போய்விட்டார். நீணட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் குழப்பத்துடன் தாராபுரம் வந்தார். பிறகு போலீசில் சென்று புகார் தந்தார்.. போலீசாரும் இதுகுறித்த விசாரணையை கையில் எடுத்தனர்.. அப்போதுதான், ராதாகிருஷ்ணனின் புதுமனைவி கேரளாவில் இருப்பது தெரியவந்தது.
அந்த புதுமனைவிக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டதாம்.. இந்த கல்யாணத்தை நடத்தி வைத்த புரோக்கர்தான், அவரது கணவராம். இந்த தம்பதி இருவரும் சேர்ந்து, நகை, பணத்துக்காக ராதாகிருஷ்ணனை மோசடி செய்தது தெரியவந்தது.
கல்யாணம்: பணத்துக்கு ஆசைப்பட்டு, தாலி கட்டிய மனைவியையே மணப்பெண்ணாக காட்டி, கல்யாணத்தையும் நடத்தி வைத்து, புரோக்கர் கமிஷனையும் வாங்கியிருக்கிறார் அந்த கணவர். இதற்கு மனைவியும் ஒத்துழைப்பு தந்துள்ளார்.. இந்த தம்பதியினருக்கு, ஒரு பெண் குழந்தை இருக்கிறதாம். திருமணம் ஆகாத பல இளைஞர்களிடம் இப்படித்தான் இந்த கேரளா தம்பதியினர் ஏமாற்றி பணம் பறித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்..
அதுமட்டுமல்ல, போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, தங்களது பெயர்களை ஒவ்வொரு ஊரிலும் மாற்றி மாற்றி சொல்லி ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த தம்பதியை பிடிக்க போலீசார் கேரளாவுக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் அந்த ஜோடி மாயமாய் மறைந்துவிட்டது.. அவர்களை தாராபுரம் போலீசார் தேடி வருகிறார்கள்.. இந்த சம்பவம் திருப்பூரில் மிகப்பெரிய பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications